img
img

பாஜம் துன் சம்பந்தன் தமிழ்ப் பள்ளியின் 30ஆம் ஆண்டு பள்ளி விளையாட்டுப் போட்டி!
வியாழன் 09 மார்ச் 2017 13:07:15

img

பாஜம் துன் சம்பந்தன் தமிழ்ப் பள்ளியின் 30ஆம் ஆண்டு பள்ளி விளையாட்டுப் போட்டி பாஜம் சீனப் பள்ளி மைதானத்தில் விமரிசையாக நடைபெற்றது. 5-3-2017 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இப்போட்டி விளையாட்டிற்கு சிரம்பான் மாவட்ட கல்வி அதிகாரி வ.அமிர்தலிங்கம், பாஜம் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் அமைப்பின் தலைவர் டத்தோ ஆர்.ஆர். எம். கிருஷ்ணன், தொழிலதிபர் பிரவின்ராஜ் ஆகியோர் சிறப்பு வருகை தந்தனர். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் மா.ஜெயரத்தினம் வர வேற்புரையாற்ற தலைமையாசிரியர் ந.சரவணன் தலைமையுரையோடு சிரம்பான் மாவட்ட கல்வி அதிகாரி வ. அமிர்தலிங்கத்தின் திறப்புரையுடன் போட்டி விளையாட்டுகள் ஆரம்பமாகின. கம்பீரமாக உடையணிந்து அணிவகுத்த மஞ்சள், நீலம், சிவப்பு இல்ல அணிவகுப்பை வ.அமிர்தலிங்கம் பார்வையிட்டு மரியாதை செலுத்தினார். பெற்றோர்களும் முன்னாள் மாணவர்களும் திரளாக வருகைத் தந்து போட்டி விளையாட்டை கண்டு களித்து ஆதரவு அளித் தனர். புதியதாக இப்பள்ளிக்கு தலைமையாசிரியர் பொறுப்பேற்றிருக்கும் ந.சரவணன் பெற்றோர்களின் ஆதரவிற்கு நன்றி கூறிக் கொண்டார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பின்செல்

விளையாட்டுச் செய்திகள்

img
6ஆவது முறையாக இறுதியாட்டத்தில் கால்பதித்தது அர்ஜெண்டினா!

இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.

மேலும்
img
லியோனல் மெஸ்சி ஓய்வு!

கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியுடன் தாம் ஓய்வு பெறலாம்

மேலும்
img
கட்டார் உலகக் கிண்ணத்தில் மூன்றாவது இடத்தை பிடிக்க குரோஷியா - மொரோக்கோ மோதல்!

கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்

மேலும்
img
ஜெர்மனி கோல் காவலர் மரணம்!

வயது முதிர்வு மற்றும் உடல் நல குறைவால் தில்கோவ்ஸ்கி மரணமடைந்தார்

மேலும்
img
எப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டி: அர்செனல் வெற்றி!

1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img