டோஹா, டிச. 15-
கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியுடன் தாம் ஓய்வு பெறலாம் என அர்ஜெண்டினா வீரர் லியோனல் மெஸ்சி கோடி காட்டியுள்ளார். உலகின் முன்னணி கால்பந்து வீரர்களில் ஒருவராக லியோனல் மெஸ்சி விளங்கி வருகிறார். அர்ஜெண்டினாவின் தேசிய ஆட்டக்காரரான மெஸ்சி, டியாகோ மரடோனாவிற்கு அடுத்து அவ்வணிக்கான பல சாதனைகளை படைத்துள்ளார்.
குறிப்பாக அர்ஜெண்டினா அணிக்காக பல வெற்றிகளை தேடித் தந்துள்ளார். ஆனால் அவரால் ஒரு முறை கூட உலகக் கிண்ணத்தை வெல்ல முடியவில்லை. இந்தவொரு சூழ்நிலையில் கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியின் இறுதியாட்டத்திற்கு இவர் தலைமையிலான அர்ஜெண்டினா அணி முன்னேறி உள்ளது. உலகக் கிண்ணத்தை வெல்ல அர்ஜெண்டினா அணிக்கு இதுவொரு மகத்தான வாய்ப்பாகும் என கால்பந்து ஆர்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய லியோனல் மெஸ்சி, உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியின் இறுதியாட்டத்திற்கு முன்னேறி உள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. இறுதியாட்டத்தில் வெற்றி பெற்று உலகக் கிண்ணத்தை கைப்பற்ற அர்ஜெண்டினா அணி இறுதி வரை போராடும். எந்தவொரு சூழ்நிலையிலும் அம்முயற்சியில் இருந்து பின்வாங்காது. அதே வேளையில் கட்டார் உலகக் கிண்ண இறுதியாட்டம்தான் என்னுடைய அர்ஜெண்டினா அணிக்கான கடைசி ஆட்டமாக கூட இருக்கலாம் என்று மெஸ்சி கூறியுள்ளார்.
இதனிடையே அர்ஜெண்டினா அணிக்காக 172 ஆட்டங்களில் லியோனல் மெஸ்சி விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்