img
img

6ஆவது முறையாக இறுதியாட்டத்தில் கால்பதித்தது அர்ஜெண்டினா!
வெள்ளி 16 டிசம்பர் 2022 13:37:29

img

டோஹா, டிச. 15-

உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியின் இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர். 22ஆவது உலகக் கிண்ண கால்பந்துப் போட்டி கட்டாரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 32 அணிகள் களமிறங்கிய இப்போட்டி இறுதியாட்டத்தை எட்டியுள்ளது.

லுசாய்ல் அரங்கில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் குரோஷியா அணியை சந்தித்து விளையாடினர்.
இரு முன்னணி அணிகள் மோதியதால் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இவ்வாட்டம் தொடங்கியது. முற்பாதி ஆட்டத்தின் 34ஆவது நிமிடத்தில் அர்ஜெண்டினா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு அதன் முன்னணி ஆட்டக்காரர் லியோனல் மெஸ்சி கோலடித்தார்.

அவரைத் தொடர்ந்து சக அணி வீரர் ஜூலியன் அல்வாரஸ் போட்டியின் 39ஆவது நிமிடத்தில் தங்கள் அணிக்கான இரண்டாவது கோலை அடித்து ரசிகர்களை மகிழ்ச்சியின் எல்லைக்கே கொண்டு சென்றார். இதன்மூலம் போட்டியின் முதல் பாதியில் 2-0 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா அணி முன்னிலை வகித்தது. தொடர்ந்து அனல் பறந்த இரண்டாவது பாதி ஆட்டத்தின் 69ஆவது நிமிடத்தில் 2ஆவது முறையாக ஜூலியன் அல்வாரஸ் தனது அணிக்கான மூன்றாவது கோலை பதிவு செய்தார். தொடர்ந்து கோல் அடிக்க குரோஷியா அணி வீரர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. கூடுதல் நேரம் வழங்கப்பட்ட போதும் குரோஷியா அணியால் கோல் அடிக்க முடியவில்லை.

இதன்மூலம் குரோஷியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக முன்னேறியது. 1978, 1986ஆம் ஆண்டுகளில் உலகக் கிண்ணத்தை வென்றுள்ள அர்ஜெண்டினா அரையிறுதியில் ஒரு போதும் வீழ்ந்ததில்லை. அந்த பெருமையோடு 6ஆவது முறையாக இறுதிப் போட்டிக்குள் கால்பதித்தது.

முன்னதாக உலக தரவரிசையில் 3ஆவது இடம் வகிக்கும் அர்ஜெண்டினா லீக் சுற்றில் தொடக்கத்தில் சவூதி அரேபியாவிடம் 1-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சிகரமாக தோற்றது. அதன் பிறகு மெக்சிகோ, போலந்தை தோற்கடித்து நாக்-அவுட் சுற்றை எட்டிய அர்ஜெண்டினா 2ஆவது சுற்றில் ஆஸ்திரேலியாவை விரட்டியது.

வாக்குவாதம், மோதல், நடுவரின் இடைவிடாது எச்சரிக்கை என்று அனல் பறந்த காலிறுதியில் பெனால்டி வாய்ப்பில்நெதர்லாந்தை வீழ்த்தி இருந்தது.

பின்செல்

விளையாட்டுச் செய்திகள்

img
6ஆவது முறையாக இறுதியாட்டத்தில் கால்பதித்தது அர்ஜெண்டினா!

இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.

மேலும்
img
லியோனல் மெஸ்சி ஓய்வு!

கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியுடன் தாம் ஓய்வு பெறலாம்

மேலும்
img
கட்டார் உலகக் கிண்ணத்தில் மூன்றாவது இடத்தை பிடிக்க குரோஷியா - மொரோக்கோ மோதல்!

கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்

மேலும்
img
ஜெர்மனி கோல் காவலர் மரணம்!

வயது முதிர்வு மற்றும் உடல் நல குறைவால் தில்கோவ்ஸ்கி மரணமடைந்தார்

மேலும்
img
எப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டி: அர்செனல் வெற்றி!

1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img