முன்னாள் ஜெர்மனி கால்பந்து கோல்காவலர் ஹான்ஸ் தில்கோவ்ஸ்கி மரணமடைந்தார்.
கடந்த 1957-67இல் மேற்கு ஜெர்மனி கால்பந்து அணியின் கோல்காவலராக ஹான்ஸ் தில்கோவ்ஸ்கி இருந்தார்.
மேற்கு ஜெர்மனி அணிக்காக 39 போட்டியில் விளையாடிய இவர், வெஸ்ட்பாலியா ஹெர்ன் (1955-62, 219 போட்டி), போருசியா டார்ட்மண்ட் (1963-67, 81 போட்டி) உள்ளிட்ட கிளப் அணிகளுக்காகவும் பங்கேற்றுள்ளார்.
கடந்த 1966இல் இங்கிலாந்தில் நடந்த பிபா உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இங்கிலாந்து, மேற்கு ஜெர்மனி அணிகள் மோதின. 90 நிமிட முடிவில் போட்டி 2-2 என சமநிலையில் இருந்தது.
கூடுதல் நேரத்தில் (98ஆவது நிமிடம்) இங்கிலாந்தின் ஜெப் ஹர்ஸ்ட் தூக்கி அடித்த பந்து, கோல் கம்பத்தில் பட்டு, கோல் லயன் மீது விழுந்தது. இது கோல் என அறிவிக்க சர்ச்சை எழுந்தது. இப்பந்தை கோல்காவலர் தில்கோவ்ஸ்கி தடுக்க தவறியதால் இங்கிலாந்து அணி 4-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
ஓய்வுக்கு பின் சில உள்ளூர் கிளப் அணிகளுக்கு நிர்வாகியாக (1970-1981) பணியாற்றினார். இந்நிலையில் வயது முதிர்வு மற்றும் உடல் நல குறைவால் தில்கோவ்ஸ்கி மரணமடைந்தார்.
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்