ருக்குன் தெத் தாங்கா இயக்கம் மலாய்க்காரர், சீனர், இந்தியர் ஆகிய மூவினங் களும் பங்கு கொண்ட போட்டி விளையாட்டு விழாவினை மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.சிலிம் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ குஷாய்ரி அப்துல் தாலிப்பின் ஆதரவில் நடைபெற்ற இவ்விளையாட்டு விழாவில் மூவினங்களைச் சேர்ந்த ஐநூற்றுக்கும் மேற்பட் டோர் இன மத பேதமின்றி கலந்து தங்களது ஒற்றுமையை வெளிப் படுத்தினர். இதுபோன்ற விழாக் களில் எல்லா இனத்தவரும் கலந்து கொண்டு ஒற்றுமையை வெளிப்படுத்துவது பாராட்டுக் குரியது என தெரிவித்தார். காலை மணி 7.30 க்கு உடற்பயிற்சியுடன் ஆரம்பிக்கப் பட்ட இவ்விழா பிற்பகல் மணி 12.30க்கு நிறைவு பெற்றது. சிறுவர்களுக்கு புட்டிகளில் நீர் நிரப்புதல், கரண்டியால் பிங்பாங் பந்தை எடுத்தல், மூன்றுகால் ஓட்டம் போன்ற போட்டிகளும் பெரியவர்களுக்கு சாக்கு ஓட்டம், கயிறு இழுத்தல், மெது சைக்கிள், கபடி, வழுக்கு மரம் ஏறுதல், பலூன் உடைத்தல் போன்ற போட்டிகளும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தன. தமிழர்களில் பாரம்பரிய விளையாட்டான வழுக்கு மரம் ஏறுதல் அனைவரின் கவனத்தை ஈர்த்த வேளையில் கபடி போட்டியில் பிற இனத்தவர்கள் கலந்து கொண்டு பெரும் பாராட்டைப் பெற்றனர்.
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்