பேரா மாநில தமிழ்ப்பள்ளிகளுக் கிடையிலான தமிழ்ப்பெரியார் அ.மு.சு. பெரியசாமி பிள்ளை கிண்ணம் எழுவர் கால்பந்து போட்டியை சுங்கை சிப்புட் இந்தியர் இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது. 12 வயதுக்கும் கீழ்ப்பட்ட மாணவர்களுக்காக நடத்தப்படும் இந்த போட்டி மார்ச் 12ஆம் தேதி சுங்கை சிப்புட் மகாத்மா காந்தி கலாசாலையில் நடைபெறவுள்ளது. தனித்தனியே குழுக்கள் அமைக்க இயலாத தமிழ்ப்பள்ளிகளை ஒன்றிணைத்து ஒரு குழுவாக இப்போட்டியில் பங்கு பெறலாம். பிற மொழிப் பள்ளி களைச் சேர்ந்த இந்திய மாணவர்களும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். ஆனால் அம்மாணவர்கள் தமிழ்ப்பள்ளியின் கீழ்தான் விளையாட முடியும் என இயக்கத்தின் தலைவர் வீ.சின்னராஜு குறிப்பிட்டார். இப்போட்டியில் முதல் பரிசு ரொக்கம் 1,500 வெள்ளி, வெற்றி கோப்பை, பதக்கங்கள் வழங்கப்படும். இரண்டாம் பரிசாக ரொக்கம் 1,000 வெள்ளி, கோப்பை, பதக்கங்கள், மூன்றாம், நான்காம் பரிசாக தலா ரொக்கம் 500 வெள்ளி, வெற்றி கோப்பை, பதக்கங்கள் ஆகியவை வழங்கப்படும். கால் இறுதி சுற்றில் தோல்வியுற்ற 4 குழுக்களுக்கு தலா 250 வெள்ளி ரொக்கமும் நினைவு பரிசுகளும் வழங்கப்படும். இப்போட்டிக்கான பதிவு மார்ச் 10 தேதி இரவு 10.00 மணி வரை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள குழுக்கள் நுழைவு கட்டணம் 100 வெள்ளி செலுத்தி தங்கள் குழுக் களின் பெயரை கால அவகாசத்திற்குள் பதிந்துகொள்ளுமாறு சின்ன ராஜு கேட்டுக் கொண்டார். தொடர்புக்கு: வீ.சின்னராஜு 013- 508 1812, கு.உமாபதி 016- 537 6255.
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்