இசூசு மலேசியா செண்டிரியான் பெர்ஹாட் (Isuzu Malaysia Sdn. Bhd.) நிறுவனம், அதன் வாகனங்களின் வரிசை யில் புதியதோர் அறிமுகத்தை செய்துள்ளது. 3.0L D-Max single cab எனும் இப்புதிய அறிமுகம் மலேசியாவில் கிடைக்கக்கூடிய ஒரே ஒரு வகை மட்டுமே என்று அதன் மலேசிய நிர்வாக இயக்குநர் ஹஜிமி மஷிமுரா கூறினார். இதுவே மிகவும் சக்தி வாய்ந்த பிக் ஆப் டிரக் என்றும் வர்ணிக்கப்பட்டுள்ளது. இவ்வகை டிரக்குடன் 2.5L ரகமும் தற்போது கூடுதல் பாதுகாப்பு அம்சங்க ளுடன் சந்தையில் விற்கப் படுவதாக அவர் சொன்னார். ஒரு கனரக வாக னத்திற்கு ஈடான அனைத்து அம்சங்களும் இதில் உள்ளடக்கியுள்ளன. கரடு முரடான சாலைகளிலும் சுமுக மான பயணத்திற்கு ஏற்றவல்ல வாகனம் இதுவாகும். வாகனத்தின் முன்புற போனட், கிரில், பம்பர் வடி வமைப்புகள் இதற்கு உத்தரவாதம் அளிக்கின்றன. மலேசியாவில் வாகன மோட்டிகளின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் தங்களின் இந்த அறிமுகம் அமைந்திருப்பதாக மஷிமுரா தெரிவித்தார். கடந்த ஆண்டு, வாகன விற்பனை சந்தை சவால்மிக்க தாக இருந் தாலும் மலேசியாவில் முதல் தர வர்த்தக வாகன விற் பனை நிறுவனம் என்ற அந்தஸ்தை இசூசு தக்கவைத் துக் கொண்டதை அவர் பெருமை யுடன் பகிர்ந்து கொண்டார்.