நாம் உபயோகப்படுத்தும் ஸ்மார்ட் போன்களில் நமது பல்வேறு பயன்களுக்காக பல மொபைல் ஆப்கள் உள்ளன. ஆனால் நாம் பயன்படுத்தும் அனைத்து மொபைல் ஆப்ஸ்களும் பாதுகாப்பானதாக இருக்கிறதா என்று பார் த்தால் அது கேள்விக்குறியே! இந்த மொபைல் ஆப்ஸகள் மூலமாக நாம் சமூக வலைத்தளங்களை உபயோகிப்பதும், ஷொப்பிங் செய்வதும் அதிகரித்து வருகிறது. சில மொபைல் ஆப்ஷ்களின் மூலம் ஷொப்பிங் செய்கையில், நமது பெயர் உட்பட முக வரிகளை கொடுப்பதால், நமது தரவுகள் திருடப்படுவதற்காக வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. எனவே, மொபைல் ஆப்ஸ்களை பயன்படுத்தும் சில விதிமுறைகளை கவனத்தில் கொள்ளுங்கள். Private policy சில ’ஆப்’களை பதிவிறக்கம் செய்யும்போது அவற்றில் சில நமது Photo, contact களைப் பதிவு செய்யக்கோரும். நாம் பதிவு செய்யும் தகவல்கள் எவ்வாறு உபயோகிக்கப்படும், பகிரப்படுமா என Private policy-யை படித்து தெரிந்து கொண்ட பின்னரே உபயோகிக்க வேண்டும். Additional security/authentication layers ஆப்களை இன்ஸ்டால் செய்யும்போது அதில் login credentials எனும் நம் தனிப்பட்ட தகவல்களை பதிவு செய் வோம். அந்த தகவல்களை யார் யார் பார்க்கலாம், கூடுதல் பாதுகாப்பு உள்ளதா என அறிந்துகொண்டு உப யோகிக்கலாம். Critical information மொபைல் ஆப் மூலம் ஷொப்பிங் செய்யும் போது அதில் Account Number. password ஆகியவற்றை பதிவு செய்வதை போதுமான வரை தவித்துக்கொண்டால், நமது வங்கி கணக்குகளைப் பாதுகாக்கலாம். Unique user id and password அனைத்து ஆப்ஸ்களிலும் வெவ்வேறு Password பயன்படுத்துவதன் மூலம் Hackerகள் நமது தகவல்களை திரு டுவதை தடுக்கலாம்.