(ஹேமா எம்.எஸ்.மணியம்) ஜாவி,
அழகு சாதனப் பயிற்சி என்பது ஒருவருடைய அழகான தோற்றத்தை உருவாக்குவதுதான். ஆனால் அதற்கு முழுமையான பயிற்சி தேவை. அழகு நிலையத்தை தொடங்குவதற்கு ஒருவர் குறைந்தது அனைத்துப் பிரிவுகளிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிரிவுகள் என்று பார்த்தோமானால் மணப் பெண் அலங்காரம், சேலை கட்டும் விதம், மருதாணி போடுதல், பல விதமான தலைமுடி அலங்காரம் என்று இன்னும் பல வகை அடங்கும். இதை அனைத்தும் பழகுவதற்கு குறைந்தது 3,500 ரிங்கிடிலிருந்து 20,000 ரிங்கிட் வரை கட்டணம் விதிக்கப்படுகிறது .
ஆனால் சாரணி அழகு நிலையத்தின் முயற்சியில் அழகுசாதனப் பயிற்சி முற்றிலும் இலவசமாக கற்றுத் தரப் போவதாக சாரணி அழகு நிலையத்தின் உரிமையாளர் திருமதி கனிமொழி தமிழ்செல்வன் தெரிவித்தார்.இப்பயிற்சி அரசாங்கத்தின் ஒத்துழைப்போடு நடைபெறுகிறது. இதில் பங்கெடுக்கும் மாணவர்கள் எந்தவொரு கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை என்றும் தெரிவித்தார். அத்துடன், இந்த அழகு சாதன பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து உதவி பணமும் வழங்கப்படும்.
Read More: Malaysia Nanban News Paper on 7.12.2017