கூகுளின் வருகைக்கு முன்னர் இணைய உலகில் ஜாம்பவானாக திகழ்ந்த யாகூ தற்போது பாரிய சரிவினை எதிர்நோக்கி வருகின்றது. இதற்கு பயனர்களின் யாகூ கணக்குகள் ஹேக் செய்யப்படுவதும் ஒரு காரணமாக விளங்குகின்றது. கடந்த சில மாதங்களாக இது தொடர்பான தகவல்கள் வெளியாகிவருகின்ற நிலையில் தற்போது மற்றுமொரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 2013 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் 500 மில்லியன் தொடக் கம் 1 பில்லியன் வரையான கணக்குகள் பாதிப்புக்குள்ளாகியிருந்தமையை தற்போது யாகூ நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது. இது தவிர 2015 மற்று் 2016 ஆகிய ஆண்டுகளில் சுமார் 32 மில்லியன் வரையான கணக்குகள் ஹேக் செய்யப் பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.தற்போது இப்பிரச்சினை தொடர்பாக அமெரிக்காவின் பாது காப்பு அமைப்பானது, பரிவர்த்தனைக் குழுவுடன் இணைந்து விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இதனிடையே கணக்குகளை ஹேக் செய்வதற்கு போலியான குக்கீகள் (Cookies) பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.