img
img

ஜெர்மன்விங்ஸ் விமானி விமானத்தை திட்டமிட்டு மலையில் மோதியதாக பரபரப்பு தகவல்
வெள்ளி 08 மே 2015 00:00:00

img
ஜெர்மன்விங்ஸ் விமானத்தின் துணை விமானி லுபிட்ஸ் விமானத்தை வேண்டுமென்றே திட்டமிட்டு மலையில் மோதியது விசாரணையில் தெரியவந்தது. ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரிலிருந்து ஜெர்மனியின் டியூஸெல்டார்ப் நகரை நோக்கி சென்ற ஜெர்மன்விங்ஸ் பயணிகள் விமானம் பிரான்ஸ் நாட்டின் தென்பகுதியில் உள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பெலோன் பள்ளத்தாக்கில் "விழுந்து நொறுங்கியது". இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 144 பயணிகள் உள்ளிட்ட 150 பேரும் பலியாகினர். "துணை விமானி லுபிட்ஸ் விமானத்தை வேண்டுமென்றே திட்டமிட்டு மலையில் மோதியது விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில் ஜெர்மன் நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், விபத்து நடந்த அதே நாளில் துணை விமானி லுபிட்ஸ் ஜெர்மனியின் டியூஸெல்டார்ப் நகரில் இருந்து பார்சிலோனா நகருக்கு தான் இயக்கிய விமானத்தை எந்தவித தொழில்நுட்ப காரணங்களும் இல்லாமல் நீண்ட நேரம் தாழ்வாக பறக்கவைத்ததாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் மிக கவனமாக திட்டமிட்டே இந்த விபத்தை அவர் நிகழ்த்தியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் நீண்ட நாட்களாக தீவிர மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததும், அவரது கணினியில் தற்கொலை செய்து கொள்வதற்கான வழிகளைப் பற்றி தேடியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பின்செல்

விளையாட்டுச் செய்திகள்

img
6ஆவது முறையாக இறுதியாட்டத்தில் கால்பதித்தது அர்ஜெண்டினா!

இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.

மேலும்
img
லியோனல் மெஸ்சி ஓய்வு!

கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியுடன் தாம் ஓய்வு பெறலாம்

மேலும்
img
கட்டார் உலகக் கிண்ணத்தில் மூன்றாவது இடத்தை பிடிக்க குரோஷியா - மொரோக்கோ மோதல்!

கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்

மேலும்
img
ஜெர்மனி கோல் காவலர் மரணம்!

வயது முதிர்வு மற்றும் உடல் நல குறைவால் தில்கோவ்ஸ்கி மரணமடைந்தார்

மேலும்
img
எப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டி: அர்செனல் வெற்றி!

1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img