இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 260 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, நான்கு போட்டிகள்கொண்ட பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் புனேயில் நேற்று தொடங்கியது. டாசில் வெற்றி பெற்ற ஆஸி. கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். ஆட்ட நேர இறுதியில் அந்த அணி 9 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்களை எடுத்திருந்தது. மிட்சேல் ஸ்டார்க் 57 ரன்களுடனும், ஹசில்வுட் 1 ரன்னுடனும் களத்தில் நின்றனர். 2வது நாள் ஆட்டத்தை இன்று தொடங்கிய அந்த அணி மேற்கொண்டு 4 ரன்களை மட்டுமே சேர்த்து 260 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. அஸ்வின் பந்தில் பவுண்டரி அடித்து 61 ரன்களை எட்டிய ஸ்டார்க், அதே ஓவரில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஹசில்வுட் 1 ரன்னுடன் அவுட்டாகாமல் நின்றிருந்தார். இதையடுத்து இந்தியா தனது முதல் இன்னிங்சை தொடங்கி ஆடி வருகிறது. ஆஸி. அணியை பொறுத்தளவில், அதிகபட்சமாக ரென்ஷா 68 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் உமேஷ் 4 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்திய அணி: முரளி விஜய், ராகுல், புஜாரா, விராத் கோஹ்லி, ரஹானே, விருதிமான் சாஹா, ஆர்.அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஜே.யாதவ், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ். ஆஸ்திரேலிய அணி விவரம்: டேவிட் வார்னர், ரென்ஷா, ஸ்மித், மார்ஷ், ஹேன்ட்ஸ்கோம்ப், எம்.மார்ஷ், வேட், எஸ் ஓ'கீபே, நேதன் லையன், மிட்சேல் ஸ்டார்க், ஹஸ்சில்வுட்.
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்