மலேசிய ஜூனியர் ஹாக்கிப் போட்டியில் களமிறங்க எம்ஐஎஸ்சிஎப் - யுஎப்எல் அணிகள் தயார் நிலையில் இருப்பதாக மலேசிய இந்தியர் விளையாட்டு கலாச்சார அறவாரியத்தின் துணைத் தலைவர் ஜெ. தினகரன் நேற்று கூறினார். மலேசிய ஹாக்கி சங்கத்தின் ஏற்பாட்டிலான இந்த ஜூனியர் ஹாக்கிப் போட்டியை வரும் மார்ச் மாத இறுதியில் தொடங்கவுள்ளனர். இப்போட்டியில் மொத்தம் 32 அணிகள் களமிறங்கவுள்ளன.கடந்தாண்டு இப்போட்டியில் களமிறங்கிய எம்ஐஎஸ்சிஎப் - யுஎப்எல் அணி 8ஆவது இடத்தை பிடித்தது. ஆனால் இம்முறை இப்போட்டிகளில் வெற்றியை குவிக்க வேண்டும் என்ற நோக்கில் 2 அணிகள் தயார் படுத்தப்பட்டுள்ளன.எம்ஐஎஸ்சிஎப் - யுஎப்எல் அணி, எம்ஐஎஸ்சிஎப் - யுஎப்எல் அணி (பினாங்கு) எனும் பெயர் களில் அவ்விரு அணிகளும் போட்டியில் களமிறங்கவுள்ளன. இவ்விரு அணிகளைச் சேர்ந்த ஆட்டக்காரர்களுக்கு கடுமையான பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். எம்ஐஎஸ்சிஎப் - யுஎப்எல் அணிக்கு நிஷல் குமார் தலைமை பயிற்றுநராக பணியாற்றி வருகிறார். இவ்வணிக்கு சுகுமாறன் பெருமாள் நிர்வாகியாக பொறுப்பு வகிக்கிறார். இந்த அணியின் விளையாட்டாளர்களுக்கு கோலாலம்பூர் ஹாக்கி அரங்கில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. பினாங்கு அணிக்கு பயிற்றுநராக முன்னாள் தேசிய விளையாட்டாளர் ஜீவமோகனும், நிர்வாகியாக எல்.தியாகு ஆகியோரும் பொறுப்பு வகிக்கிறார்கள். இந்த அணியின் விளையாட்டாளர்களுக்கு சுங்கைப்பட்டாணி ஹாக்கி திடலில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மலேசிய இந்தியர் விளையாட்டு கலாச்சார அறவாரியத்தை பொறுத்தவரையில் டத்தோ டி.மோகன் தலைமை யில் விளையாட்டுத்துறையில் சமுதாய இளைஞர்களுக்கு வாய்ப்புகளை அதிகப்படுத்தும் நிலைப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. சுக்கிம் எனப்படும் மலேசிய இந்தியர் விளையாட்டுப்போட்டிகள் தொடங்கி பல விதமான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். வாய்ப்புகள் இல்லை என்ற நிலைப்பாட்டை தாண்டி வாய்ப்புகளை அதிகப்படுத்தி வருகிறோம் என்று ஜெ.தினகரன் குறிப்பிட்டார்.
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்