சீ விளையாட்டுப் போட்டியில் தங்கம் வெல்வேன் என்று தேசிய கராத்தே வீராங்கனை ஷகிலா ஷாலினி ஜெப்ரி கிருஷ்ணன் நேற்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.29ஆவது சீ விளையாட்டுப் போட்டி வரும் ஆகஸ்ட் மாதத்தில் தலைநகரில் நடைபெறவுள்ளது. மலேசியாவில் நடப்பதால் இப்போட்டியில் தங்கப்பதக்கங்களை குவிக்க வேண்டும் என்ற நோக்கில் போட்டி யாளர்கள் அனைவரும் கடுமையான பயிற்சிகளுக்கு மத்தியில் தயாராகி வருகின்றனர்.இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் ஆஸ்திரியாவில் நடைபெற்ற உலக கராத்தே போட்டியில் களமிறங்கிய ஷகிலாவுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவருக்கு 12 வாரங்கள் ஓய்வு வழங்கப்பட்டது. தற்போது காயத்தில் இருந்து மீண்டுள்ள ஷகிலா மீண் டும் பயிற்சிகளுக்கு திரும்பியுள்ளார்.பயிற்சிகளுக்கு திரும்பியிருந்தாலும் ஷகிலாவுக்கு இன்னமும் போட்டி களில் பங்கேற்க வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இதனால் கடந்த ஜனவரி மாதம் பிரான்சில் நடைபெற்ற பொது கராத்தே போட்டியில் களமிறங்கும் வாய்ப்பை இழந்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியது, காலில் ஏற்பட்டுள்ள காயம் என் பயிற்சி களுக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்து வருகிறேன். சீ விளையாட்டுப் போட்டியில் தங்கம் வெல்ல வேண்டும் என்பது தான் என்னுடைய மிகப் பெரிய இலக்காக வுள்ளது. இந்த இலக்கை அடைவதற்காக கடும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இப்பயிற்சிகளின் மூலம் சீ போட்டியில் நிச்சயம் தங்கம் வெல்வேன் என்ற நம்பிக்கை தமக்குள்ளதாக அவர் கூறினார். சீ விளையாட்டுப் போட்டிக்கு முன் அனைத்துலக ரீதியில் நடைபெறும் பல முக்கிய போட்டிகளிலும் ஷகிலா கலந்து கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்