கத்தார் பொது டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவின் முதலாவது சுற்றில் சானியா மிர்சா, பார்போரா ஸ்டிரிகோவா ஜோடி ராக்யூல் அடாவோ - யுபான் இணையை பந்தாடியது. பெண்களுக்கான கத்தார் டோட்டல் பொது சர்வதேச டென்னிஸ் போட்டி டோஹாவில் நடந்து வருகிறது. இதில் ஒற்றையர் பிரிவின் 2ஆவது சுற்று ஆட்டம் ஒன்றில் 2ஆம் நிலை வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் 4-6, 6-0, 4-6 என்ற செட் கணக்கில் ரஷியாவின் டாரியா கசட்கினாவிடம் வீழ்ந்தார். நிறைய தவறுகளை இழைத்ததால் அதிர்ச்சி தோல்வியை கெர்பரால் தவிர்க்க முடியவில்லை. மற்றொரு ஆட்டத்தில் கரோலினா வோஸ்னியாக்கி(டென்மார்க்) 7-5, 6-3 என்ற நேர் செட்டில் அக்னீஸ்கா ராட்வன்ஸ்காவை (போலந்து) வெளியேற்றி கால்லிறுதிக்கு முன்னேறினார். இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, செக்குடியரசின் பார்போரா ஸ்டிரிகோவா ஜோடி 6-2, 6-4 என்ற நேர் செட்டில் ராக்யூல் அடாவோ (அமெரிக்கா)- யுபான் (சீனா) இணையை பந்தாடியது. அதே நாளில் தொடர்ந்து காலிறுதியில் களம் இறங்கிய சானியா- ஸ்டிரிகோவா கூட்டணி 6-4, 6-3 என்ற நேர் செட்டில் டாப் ரோவ்ஸ்கி (கனடா)- டாரிஜா ஜூராக் (குரோஷியா) இணையை வீழ்த்தி அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தது.
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்