போவ்லிங் விளையாட்டில் இந்தியர்கள் பெருமளவில் சாதிக்க வேண்டும் என்று புக்கிட் அமான் போலீஸ் படையின் குற்றப் புலனாய்வு பிரிவுத் தலைவர் டத்தோ தெய்வீகன் நேற்று வலியுறுத்தினார். ஒரு கால கட்டத்தில் சீனர்கள், மலாய்க்காரர்கள் தான் அதிகமாக இந்த போவ்லிங் விளையாட்டில் ஆர்வம் காட்டி வந்தனர். ஆனால் இன்று இந்தியர்கள் இவ்விளையாட்டில் பங்கேற்று பல வெற்றிகளை குவித்து வருகின்றனர்.குறிப்பாக இந்திய இளைஞர்கள் போவ்லிங் விளையாட்டில் அதிக ஈடுபாட்டை காட்டி வருகின்றனர்.போவ்லிங் விளை யாட்டு மையங்கள் ஆங்காங்கே திறக்கப்பட்டுள்ளன. இங்கு தங்களின் பிள்ளைகளை அழைத்து சென்று போவ்லிங் விளையாட பிள்ளைகளை ஊக்குவிக்க வேண்டும். பிள்ளைகள் தவறான பாதைகளில் செல்லாமல் இருப்பதற்கு இதுபோன்ற போவ்லிங் விளையாட்டுகள் மிக முக்கிய பங்கை ஆற்றும்.ஆகையால் இந்தியர்கள் போவ்லிங் உட்பட விளையாட்டுத்துறையில் மிகப் பெரிய வளர்ச்சியை காண வேண்டும் என்று டத்தோ தெய்வீகன் கேட்டுக் கொண்டார். வங்சாமாஜூ இந்து இளைஞர் இயக்கத்தின் ஏற்பாட்டில் போவ்லிங் விளையாட்டுப் போட்டி அண்மையில் வங்சா வால்க் மாலில் நடைபெற்றது.இப்போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டதுடன் இவர்கள் நால்வராக பிரிக்கப்பட்டு குழு வாரியாக போட்டியில் களமிறங்கி பரிசுகளை தட்டிச் சென்றனர். இப்போட்டியை அதிகாரப் பூர்வமாக முடித்து டத்தோ தெய் வீகன் வெற்றியாளர்களுக்கு பரிசு களை எடுத்து வழங்கி சிறப் பித்தார்.இப்பரிசளிப்பு நிகழ்வில் வங்சா மாஜூ இந்து இளைஞர் இயக்கத் தின் தோற்றுநர்கள் ராஜன், டாக் டர் வள்ளி, அமிரேஸ், இயக்கத் தலைவர் கோபி, ஏற்பாட்டுக் குழுத் தலைவர் ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர். வங்சாமாஜூ இந்து இளை ஞர் இயக்கத்தின் ஏற்பாட்டில் நான்காவது ஆண்டாக இப் போவ்லிங் போட்டி நடை பெற்றது. ஒவ்வோர் ஆண்டும் இப்போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேவருகிறது. வரும் காலங்களில் இப்போட்டி வெற்றிகரமாக நடத்தப்படும் என்று ராஜன் செய்தி யாளர்களிடம் கூறினார்.
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்