வங்காள தேசத்துக்கு எதிரான டெஸ்டில் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரரான ஆர். அஸ்வின் முதல் இன்னிங்சில் 2 விக்கெட் கைப்பற்றினார். 2-வது விக்கெட்டான முஷ்பிகுர் ரகீமை ‘அவுட்’ செய்த போது அஸ்வின் 250-வது விக்கெட்டை தொட்டார். 45-வது டெஸ்டில் 250 விக்கெட்டை எடுத்து அதிவேகத்தில் எடுத்தவர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்பு ஆஸ்திரேலிய வீரர் டென்னிஸ் லில்பி 49 டெஸ்டில் 250 விக்கெட் எடுத்ததே சாதனையாக இருந்தது. இந்த சாதனையால் சென்னையை சேர்ந்த 30 வயதான ஆர்.அஸ்வின் மகிழ்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-அதிவேகத்தில் 250 விக்கெட் கைப்பற்றி சாதனை புரிந்ததை நான் சிறந்ததாக கருதுகிறேன். எனது சிறந்த சாதனைகளில் ஒன்றாக நினைக்கிறேன். இந்த ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உதவியாக அமையவில்லை. முதல் இன்னிங்சில் எனது பந்து வீச்சு நேர்த்தியாக அமையவில்லை. 2-வது இன்னிங்சில் எனது பந்துவீச்சு மிகவும் நேர்த்தியாக இருந்தது மகிழ்ச்சி அளித்தது. புதிய பந்தில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினேன்.இவ்வாறு அஸ்வின் கூறியுள்ளார். 250 விக்கெட்டை கைப்பற்றிய 6-வது இந்தியர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றார்.தற்போதைய இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்கும் அனில் கும்ப்ளே 619 விக்கெட் கைப்பற்றி முதலிடத்தில் உள்ளார். கபில்தேவ் (434 விக்கெட்), ஹர்பஜன் சிங் (417), ஜாகீர்கான் (311), பிஷன்சிங் பெடி (266) ஆகியோர் 250 விக்கெட்டுகளுக்கு மேல் கைப்பற்றி உள்ளனர்.
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்