மலேசிய பிரிமியர் லீக் கால்பந்துப் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் சமநிலை கண்டாலும் கோலாலம்பூர் அணியினர் தொடர்ந்து முதல் இடத்தை தக்கவைத்துள்ளனர்.செலாயாங் நகராண்மைக் கழக அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் கோலாலம்பூர் அணியினர் யுஐடிஎம் அணியை சந்தித்து விளையாடினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கோலாலம்பூர் அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் யுஐடிஎம் அணியுடன் சமநிலை கண்டனர். இவ்வாட்டத்தில் சமநிலை கண்டாலும் கோலாலம்பூர் அணியினர் 7 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.சுல்தான் இஸ்மாயில் நஷிருடின் ஷா அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் திரெங்கானு அணியினர் எம்ஐஎஸ்சி - மீபா அணியை சந்தித்து விளையாடினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் திரெங்கானு அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் மீபா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர். மீபா அணியினர் தொடர்ந்து மூன்று ஆட்டங்களில் தோல்வி கண்டதால் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளனர்.இருந்த போதிலும் வரும் ஆட்டங்களில் மீபா அணியினர் வெற்றியை பதிவு செய்வார்கள் என்று அவ்வணி நிர்வாகம் கூறுகிறது. இதர பிரிமியர் லீக் ஆட்டங்களில் கிளந்தான் எப்ஏ அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் போலீஸ்படை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.நெகிரி செம்பிலான் அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் பிகேஎன்பி எப்சி அணியை வீழ்த்தினர். இதர ஆட்டங்களில் சபா, ஜேடிதி 2 அணிகள் வெற்றி பெற்றன.
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்