சூப்பர் லீக் கால் பந்துப் போட்டியில் பிகேஎன்எஸ் எப்சியை வீழ்த்துவோம் என்று சிலாங்கூர் அணியினர் சூளுரைத்துள்ளனர்.மலேசிய சூப்பர் லீக் கால்பந்துப் போட்டியில் இன்று பல முக்கிய ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. அவ்வகையில் ஷாஆலம் அரங்கில் மாலை 4.45 மணிக்கு நடைபெறவுள்ள ஆட்டத்தில் சிலாங்கூர் அணியினர் பிகேஎன்எஸ் எப்சி அணியை சந்தித்து விளையாடவுள்ளனர். இரு அணிகளுமே சிலாங்கூர் மாநிலம் என்பதால் இவ்வாட்டம் மீது ரசிகர்களி டையே மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத் தியுள்ளது. சூப்பர் லீக்கின் தொடக்க ஆட்டங்களில் பிகேஎன்எஸ் எப்சி இரு ஆட்டங்களில் தோல்வி கண்டுள்ளது. ஆனால் சிலாங்கூர் அணி ஒரு ஆட்டத்தில் வெற்றியும், ஒரு ஆட்டத்தில் சமநிலையும் கண்டுள்ளது. இதே உத்வேகத்துடன் விளையாடி சிலாங்கூர் அணியினர் பிகேஎன்எஸ் எப்சி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுவர் என்று அதன் தலைமை பயிற்றுநர் பி. மணியம் நம்பிக்கை தெரி வித்துள்ளார். இன் றைய ஆட் டத்தில் அனைத்து முன்னணி ஆட்டக் காரர் களும் களமிறங்க வுள்ளனர். சொந்த அரங் கம் என்பதால் அவர் கள் சிறப் பான ஆடத்தை வெளிப் படுத்தி அணிக்கு வெற் றியை தேடித் தருவார் கள் என்று மணியம் செய்தியாளர்களிடம் கூறினார்.இதனிடையே ஜெங்கா துன் அப்துல் ரசாக் அரங்கில் இரவு 9 மணிக்கு நடைபெறவுள்ள ஆட்டத்தில் பெல்டா யுனைடெட் அணியினர் கெடா அணியை சந்தித்து விளையாடவுள்ளனர்.ஈப்போ அரங்கில் நடைபெறும் ஆட்டத்தில் பேரா அணியினர் மலாக்கா யுனைடெட் அணியை சந்திக்கவுள்ளனர். கோல திரெங்கானுவில் நடைபெறும் ஆட்டத்தில் டீ-டீம் அணியினர் பினாங்கை சந்திக்கும் வேளையில் கூச்சிங் அரங்கில் சரவா அணியினர் பகாங் அணியை சந்திக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்