img
img

டீமில் இடம் இருக்காது!- அமித் மிஸ்ராவுக்கு கவாஸ்கர் வார்னிங்.
சனி 04 பிப்ரவரி 2017 13:21:55

img

இப்படியே பந்து போட்டால் அமித் மிஸ்ரா அணியிலிருந்து வெளியேற்றப்படுவதை தவிர்க்க முடியாது என்று எச்சரித்துள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர். இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை ருசித்தது. கடைசி ஓவரில் 8 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையிலும், பும்ரா அருமையாக பந்து வீசி இந்தியாவை வெற்றி பெறச் செய்தார். அதேபோல ஆஷிஷ் நெஹ்ரா ஆரம்பத்திலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்தின் கைகளை முடக்கி வைத்தார். இருப்பினும், இறுதிகட்டத்தில் சற்று ரன்னை வாரி வழங்கிவிட்டார். இந்த போட்டி குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர், கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார். "இந்த கால கிரிக்கெட் உலகத்தில் கடைசி ஓவருக்கு 8 ரன்கள் எடுப்பது எளிதான விஷயம்தான். அதிலும் பேட்ஸ்மேன்கள் களத்தில் நிற்கும்போது இது இன்னும் எளிதானது. அப்படியும், பும்ரா அருமையாக பந்து வீசி இந்தியாவுக்கு வெற்றி தேடி கொடுத்தார். பிட்சின் தன்மையை அறிந்து, புத்திசாலித்தனமாக பந்து வீசினார் பும்ரா. முதல் இரு பந்துகளையும் மெதுவாகவும், பிறகு வேகமாகவும் வீசி 2 விக்கெட்டுகளை அந்த ஓவரில் கைப்பற்றினார் என்றார் அவர். இந்நிலையில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா சத்தமில்லாமல் ஒரு சாதனைபடைத்துள்ளார். தனது 169வது டி20 போட்டியில் நேற்று பங்கேற்ற மிஸ்ரா, 200 விக்கெட்டுகளை சாய்த்தார். இங்கிலாந்து கேப்டன் மோர்கன் இவரது 200வது விக்கெட்டாகும். முன்னதாக, அஸ்வின் மட்டுமே டி20 போட்டிகளில் 200 விக்கெட்டை கடந்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றிருந்தார். அஸ்வின் 195 போட்டிகளில் 200 விக்கெட்டுகளை எடுத்தார். அமித் மிஸ்ரா சாதித்திருந்தாலும் அவரது நோ-பால் போடும் பழக்கம் இந்தியாவுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. நேற்றும் பென் ஸ்ட்ரோக்சை பௌல்ட் செய்த மிஸ்ரா, அது நோ-பால் ஆனதால் ஏமாற்றமடைந்தார். இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில், அமித் மிஸ்ரா நோ-பால் போடும் வழக்கத்தை திருத்திக்கொள்ள வேண்டும். அல்லது, மிஸ்ரா இந்திய அணியிலிருந்து வெளியேற்றப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று எச்சரிக்கை செய்தார். நோ-பாலில் விக்கெட்டை வீழ்த்தி ரசிகர்களை கடுப்படிப்பது மிஸ்ரா வாடிக்கையாக மாறிவிட்டது. நேற்றும் இந்த கொடுமை நடந்ததால் கவாஸ்கர் இவ்வாறு கூறியுள்ளார்.

பின்செல்

விளையாட்டுச் செய்திகள்

img
6ஆவது முறையாக இறுதியாட்டத்தில் கால்பதித்தது அர்ஜெண்டினா!

இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.

மேலும்
img
லியோனல் மெஸ்சி ஓய்வு!

கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியுடன் தாம் ஓய்வு பெறலாம்

மேலும்
img
கட்டார் உலகக் கிண்ணத்தில் மூன்றாவது இடத்தை பிடிக்க குரோஷியா - மொரோக்கோ மோதல்!

கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்

மேலும்
img
ஜெர்மனி கோல் காவலர் மரணம்!

வயது முதிர்வு மற்றும் உடல் நல குறைவால் தில்கோவ்ஸ்கி மரணமடைந்தார்

மேலும்
img
எப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டி: அர்செனல் வெற்றி!

1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img