மெல்பர்ன், ஜன. 18- ஆஸ்திரேலிய பொது டென்னிஸ் போட்டியில் ஷிமோனா ஹெலப் 3-6, 1-6 என்ற கணக்கில் அதிர்ச்சிகரமாக தோற்றார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய பொது டென்னிஸ் போட்டி மெல்பர்ன் நகரில் தொடங்கியது. தொடக்க நாளிலே முன்னணி வீராங்கனைகளில் ஒருவரான ஷிமோனா ஹெலப் அதிர்ச்சிகரமாக வெளியேறினார். உலகின் 4ஆம் நிலை வீராங்கனையான அவர் முதல் சுற்றில் அமெரிக்காவைச் சேர்ந்த ஷெல்ப ரோஜர்சை எதிர்கொண்டார். இதில் ஹெலப் 3-6, 1-6 என்ற கணக்கில் அதிர்ச்சிகரமாக தோற்றார். 7ஆம் நிலை வீராங்கனையான கார்பன் முகுருஜா (ஸ்பெயின்) முதல் சுற்றில் 7-5, 6-4 என்ற கணக்கில் மரினாவை (நியூசிலாந்து) வீழ்த்தி 2ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றார். இதேபோல வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) 7-6, (7-5), 7-5 என்ற நேர்செட் கணக்கில் கேத்ரினாவை (உக்ரைன்) வீழ்த்தினார். உலகின் 5ஆம் நிலை வீரரான நிஷிகோரி (ஜப்பான்) 5-7, 6-1, 6-4, 6-7 (6-8), 6-2 என்ற செட் கணக்கில் கடும் போராட்டத்துக்கு பிறகு குஸ்னெட் கோவை (ரஷ்யா) வீழ்த்தி 2ஆவது சுற்றுக்கு முன்னேறினார். மற்ற ஆட்டங்களில் 10ஆம் நிலை வீரரான தாமஸ் பெர்டிச் (செக் குடியரசு), டொமினிக் (ஆஸ்திரேலியா) ஆகியோர் வென்றனர்.
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்