மெல்பர்ன், ஜன. 18- ஆஸ்திரேலிய பொது டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றுக்கு ஆன்டி முர்ரே, பெடரர் முன்னேறினார். நடப்பு ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய பொது டென்னிஸ், மெல்பர்னில் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகின் முதல் நிலை பிரிட்டனின் ஆன்டி முர்ரே, உக்ரைனின் மார்சென்கோ மோதினர். அபாரமாக ஆடிய முர்ரே 7-5, 7-6, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 7-5, 3-6, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் ஆஸ்திரியாவின் மெல்சரை தோற்கடித்தார். ஜப்பானின் கெய் நிஷிகோரி 5-7, 6-1, 6-4, 6-7, 6-2 என்ற கணக்கில் ரஷ்யாவின் ஆன்ட்ரி கஸ்னட்சோவை போராடி வென்றார். சுவிட்சர்லாந்தின் வாவ்ரின்கா 4-6, 6-4, 7-5, 4-6, 6-4 என சுலோவாகியாவின் மார்டின் கிலிசனை போராடி தோற்கடித்தார். மற்ற முதல் சுற்றுப் போட்டிகளில் செக்குடியரசின் தாமஸ் பெர்டிச், குரோஷியாவின் மரின் சிலிச், பிரான்சின் ஜோ வில்பரைட் சோங்கா, அமெரிக்காவின் ஜான் இஸ்னர், சாம் குயரே, ஜாக் சாக், இஸ்ரேலின் டுடி சிலா உள்ளிட்டோர் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தனர்.
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்