மும்பை, ஜன. 18- இந்திய கிரிக்கெட் வீரர் அஷ்வின் கடந்த ஒரு ஆண்டாக ஒருநாள் அரங்கில் விக்கெட் கைப்பற்ற முடியாமல் தவித்து வருகிறார். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின். டெஸ்ட் அரங்கில் ஜொலிக்கும் நட்சத்திரமாக உள்ள இவருக்கு கடந்த ஆண்டு மிகவும் வெற்றிகரமாகவே அமைந்தது. குறிப்பாக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மூன்று முறை ஆட்டநாயகன் விருதை வென்றார். இத்தொடரில் தொடர்நாயகன் விருது, இவருக்கு வழங்காமல், அணித்தலைவர் கோஹ்லிக்கு வழங்கப்பட்டது ஒரு பக்கம் பெரும் சர்ச்சையாகவே வெடித்தது. இருப்பினும் ஜாம்பவான்களான சச்சின், டிராவிட் ஆகியோருக்கு அடுத்தபடியாக சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதை அஷ்வின் வென்றார். இரண்டாவது குழந்தைக்கு தந்தை என ஆண்டு முழுவதும் அஷ்வினுக்கு சிறந்த ஆண்டாகவே அமைந்தது. இப்படி டெஸ்ட் அரங்கில் கொடிகட்டி பறந்த அஷ்வின் ஒருநாள் கிரிக்கெட்டில் கடந்த 2016ல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2 ஒருநாள் போட்டியில் மட்டும் பங்கேற்று 2 விக்கெட் மட்டுமே கைப்பற்றினார். தற்போது இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரவிந்திர ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்த இவர், 8 ஓவர்கள் வீசி 63 ஓட்டங்கள் கொடுத்து விக்கெட் வீழ்த்த தவறினார். சமீபகாலமாக ஒருநாள் போட்டிகளில் பங்கேற்காததும் இவரால் விக்கெட் கைப்பற்றமுடியாமல் போனதற்கு ஒருகாரணம். இதை இந்த ஆண்டிலாவது அஷ்வின் மாற்றி எழுதுவார் என ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்