சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிஃபா) கிளப் உலகக் கோப்பை போட்டியில் லிவர்பூல் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இங்கிலாந்து ப்ரீமியர் லீக்கில் முன்னணி அணியான லிவர்பூலும், பிரேசில் சாம்பியனுமான பிளேமிங்கோவும் சனிக்கிழமை இரவு நடைபெற்ற இறுதிச் சுற்றில் மோதின. இரு அணிகளும் தொடக்கம் முதலே சமபலத்துடன் மோதியதால் ஆட்டம் பரபரப்பாக அமைந்தது.
கடந்த 1981-இல் இன்டர்கான்டினென்டல் கோப்பை போட்டியில் லிவர்புலை வென்றிருந்தது பிளேமிங்கோ. அதன் பின் 2012-இல் நடைபெற்ற கிளப் உலகக் கோப்பை போட்டியில் பிரேசிலின் கார்னித்தியன்ஸ் அணி லிவர்பூலை வீழ்த்தி பட்டம் வென்றிருந்தது.
வழக்கமான 90 நிமிட நேரத்தில் இரு அணிகளாலும் கோல போடமுடியவில்லை. இறுதியாக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் லிவர்புல் வீரா ராபாடோ பிர்மினோ அடித்த ஒரே கோலே வெற்றிக் கோலாக மாறியது.
சாம்பியன்ஸ் லீக் கோப்பை, யுஇஎப்ஏ சூப்பர் கோப்பை போன்றவற்றுடன், கிளப் உலகக் கோப்பையையும் லிவர்பூல் அணி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது, கிளப் அணிகள் பிரிவில் உலக சாம்பியனாக ஆகியுள்ளது லிவர்புல் அணி.
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்