ஈப்போவில் நடைபெற்ற 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கால்பந்துப் போட்டியில் கெடா அணியினர் வாகை சூடினர்.
நாடு தழுவிய நிலையில் 24 குழுக்கள் இப்போட்டியில் கலந்து கொண்டன.
கருஞ்சிறுத்தை அகாடமி என்று அழைக்கப்படும் பிளேக் பேந்தர் கல்வி நிலையம் அந்தப் போட்டி சிறப்புடன் ஏற்பாடு செய்து இருந்தது.
அந்நிலையத்தின் தலைவர் சேகர், துணைத் தலைவர் ஆனந்தன், மோகன், பிரபு, சுப்ரா, சாமி ஆகியோரின் மேற்பார்வையில் இந்த நிகழ்ச்சி நடை பெற்றது.
இறுதிச் சுற்றில் கெடா எஸ்.பி. பிரதர்ஹூட் அணியினரும் மெலாயு பேரா அணியினரும் மோதினர். கெடா அணியினர் வெற்றிக் கிண்ணத்தைத் தட்டிச் சென்றனர். ரொக்கப் பரிசு ஆயிரம் வெள்ளி பரிசுத் தொகையையும் பெற்றனர்.
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மக்கட்செல்வர் பி.கே. குமார் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை எடுத்து வழங்கினார்.
விடுமுறை நாட்களில் இத்தகைய போட்டி விளையாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ள கருஞ் சிறுத்தை அகாடமி செயலவையினரை பி.கே. குமார் வெகுவாகப் பாராட்டினார்.
வெற்றி பெற்ற அணியினருக்கு எவர் சூப்பர் செண்டிரியான் பெர்ஹாட் நிர்வாக இயக்குநர் ஜெயகுமாரும் பரிசுகளை எடுத்து வழங்கினார்.
பல இன சமயத்தவர்களிடையே இந்த நாட்டில் சமூக ஒற்றுமை மிக அவசியம் இதுபோன்ற போட்டிகளின் வழி நல்லிணக்கம், ஒற்றுமையை காக்க முடியும் என்றும் வர்த்தக பிரமுகர் பி.கே. குமார் வலியுறுத்தினார்.
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்