வியாழன் 21, அக்டோபர் 2021  
img
img

சிலாங்கூர் சாம்பியன் லீக் கால்பந்துப் போட்டியில் கோலசிலாங்கூர் பத்துடுவா அணி சாம்பியன்!
வெள்ளி 20 டிசம்பர் 2019 13:18:33

img

சிலாங்கூர் சாம்பியன் லீக் கால்பந்துப் போட்டியின்  இறுதிச் சுற்றுக்கு முதல் முறையாக தகுதி பெற்ற கோலசிலாங்கூர் பத்துடுவா அணி கிண்ணத்தை வென்று  வரலாறு  படைத்தது.

இறுதியாட்டத்தில் அது கிள்ளான் கிங்ஸ் டவுன் அணியை 4-0  என்ற கோல்களில் வீழ்த்தியது.

கடந்த சனிக்கிழமை ஷாஆலம் அரங்கில் நடைபெற்ற இந்த விறுவிறுப்பான ஆட்டத்தின் முதல் பாதியில் பத்துடுவா அணி 3 கோல்களை அடித்தது.

பிற்பாதி ஆட்டத்தில் மேலும் ஒரு கோலை அடித்து 4-0  என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து கோலசிலாங்கூர் பத்துடுவா அணிக்கு 14 ஆயிரம் வெள்ளியும் வெற்றி கிண்ணமும் பரிசாக வழங்கப்பட்டது.

சிலாங்கூர் ராஜா மூடா வெற்றியாளர்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்கி சிறப்பித்தார்.

சிலாங்கூர் கால்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்போட்டியில் 16 குழுக்கள் கலந்து கொண்டன.

ஏ பிரிவில்  இடம் பெற்ற பத்துடுவா அணி  4ல் வெற்றி, 2ல் சமநிலை, 1ல் தோல்வி கண்டு இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

காலிறுதி ஆட்டத்தில் டாமன்சாரா என்பிஎன்ஜி அணியை 4-0  என்ற கோல்களில் வீழ்த்திய அவ்வணி அரையிறுதியில் எம்பிஎஸ்ஏ குழுவை 1-0  என்ற கோலில் வீழ்த்தி இறுயாட்டத்திற்குள் நுழைந்தது.

கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வரும் சிலாங்கூர் சாம்பியன் லீக் போட்டியின் இறுதி  சுற்றுக்கு பத்துடுவா அணி தகுதி பெற்றது. இதுவே முதல் முறை என்கிறார் அதன் தலைமை பயிற்றுநர் புஷ்பநாத்  தனபாலன்.

அடுத்தாண்டு சிலாங்கூர் பிரிமியர் லீக் போட்டியில் வெற்றி பெறுவதே எங்களின் இலக்கு என்று  அவர் கூறினார்.

பின்செல்

விளையாட்டுச் செய்திகள்

img
ஜெர்மனி கோல் காவலர் மரணம்!

வயது முதிர்வு மற்றும் உடல் நல குறைவால் தில்கோவ்ஸ்கி மரணமடைந்தார்

மேலும்
img
எப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டி: அர்செனல் வெற்றி!

1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி

மேலும்
img
பிஃபா கிளப் உலகக் கோப்பை: லிவர்புல் சாம்பியன்

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிஃபா) கிளப் உலகக் கோப்பை போட்டியில்

மேலும்
img
ஆரம்பப் பள்ளிகளுக்கான கால்பந்துப் போட்டியில் கெடா வாகை சூடியது!

ஈப்போவில் நடைபெற்ற 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கால்பந்துப் போட்டியில்

மேலும்
img
சிலாங்கூர் சாம்பியன் லீக் கால்பந்துப் போட்டியில் கோலசிலாங்கூர் பத்துடுவா அணி சாம்பியன்!

சிலாங்கூர் சாம்பியன் லீக் கால்பந்துப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img