கோலாலம்பூர், நவ. 9- நாட்டின் இளம் ஸ்குவாஷ் வீராங்கனையான எஸ். சிவசங்கரி மலேசியாவைப் பிரதிநிதித்து உலக ஸ்குவாஷ் போட்டியில் முதல் முறையாக களமிறங்கவுள்ளார். பெண்கள் குழுநிலையிலான உலக ஸ்குவாஷ் போட்டி வரும் நவம்பர் 27ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 3ஆம் தேதி வரை பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, கனடா, எகிப்து, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஹாங்காங், இந்தியா, ஜப்பான், மலேசியா, மெக்சிகோ, ஹாலந்து, நியூசிலாந்து, ஸ்பெயின், அமெரிக்கா, வேல்ஸ் என 17 நாடுகள் களமிறங்கவுள்ளன. இவ்வேளையில் மலேசியாவைப் பிரதிநிதித்து இப்போட்டியில் களமிறங்கும் நான்கு வீராங்கனைகளின் பெயர் பட்டியலை மலேசிய ஸ்குவாஷ் சங்கத்தின் பயிற்றுநர் பிரிவு இயக்குநர் மேஜர் எஸ். மணியம் நேற்று அறிவித்தார். எட்டு முறை உலக சாம்பியன் பட்டம் வென்றதுடன் தற்போது உலக தரவரிசையில் 5ஆவது இடத்தில் இருக்கும் தேசிய வீராங்கனை டத்தோ நிக்கோல் டேவிட் இப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளனர். இவரைத் தொடர்ந்து ஸ்குவாஷ் விளையாட்டின் முன்னணி வீராங்கனைகளாக இருக்கும் டெலியா அர்னால்ட், லோவ் வீ வெர்ன் ஆகியோர் இப்பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். நான்காவது இடத்தை நாட்டின் இளம் முன்னணி வீராங்கனை எஸ்.சிவசங்கரி பிடித்துள்ளார். 17 வயதான சிவசங்கரி ஸ்குவாஷ் விளையாட்டில் மிகப் பெரிய வளர்ச்சியை கண்டுள்ளார். இவ்வாண்டு நடைபெற்ற மலேசிய டூவர் ஸ்குவாஷ் போட்டிகளில் சிவசங்கரி அனைத்திலும் வெற்றியைப் பதிவு செய்துள்ளார். அதே வேளையில் கடந்த ஆகஸ்ட் மாதம் போலந்தில் நடைபெற்ற உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியில் மூன்றா வது இடத்தையும் பிடித்துள்ளார். செப்டம்பரில் புக்கிட் ஜாலில் நடைபெற்ற ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியில் சாம்பி யன் பட்டத்தையும் சிவசங்கரி வென்றுள்ளார். இப்படி ஸ்குவாஷ் விளையாட்டில் சிவசங்கரி படைத்துள்ள சாதனைகள், அவரின் ஈடுபாடு களை அடிப்படையாகக் கொண்டு அவர் உலக ஸ்குவாஷ் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார் என்று மணியம் செய்தியாளர்களிடம் கூறினார். டத்தோ நிக்கோல் அன் டேவிட், டெலியா அர்னால்ட், லோவ் வீ வெர்ன், எஸ். சிவசங்கரி ஆகியோர் அடங்கிய மலேசிய அணி நிச்சயம் உலக ஸ்குவாஷ் போட்டியில் சாதிப்பார்கள் என்ற நம்பிக்கை தமக்குள்ளதாக அவர் கூறினார்.
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்