ஞாயிறு 17, அக்டோபர் 2021  
img
img

ஒரே ரன்னில் வீழ்ந்த சென்னை டோனி விளாசல் வீண்!
செவ்வாய் 23 ஏப்ரல் 2019 17:56:50

img

பெங்களூரு, 

விறுவிறுப்பான ஐபிஎல் தொடர் லீக் போட்டியில், சென்னை அணி ஒரு ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. கேப்டன் டோனியின் விளாசல் வீணானது. இந்தியாவில், ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான 12ஆவது சீசன் நடக்கிறது. பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் சென்னை, பெங்களூரு அணிகள் மோதின. 

சென்னை அணியில் கரண் சர்மா, சாம் பல்லிங்ஸ் நீக்கப்பட்டு டோனி, டுவைன் பராவோ சேர்க்கப்பட்டனர். டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி, பீல்டிங் தேர்வு செய்தார். பெங்களூரு அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்தது. உமேஷ் யாதவ் (1), ஸ்டைன் (0) அவுட்டாகாமல் இருந்தனர். சென்னை அணி சார்பில் சகார், ஜடேஜா, பிராவோ தலா 2 விக்கெட் கைப்பற்றினர். 

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு ஸ்டைன் தொல்லை தந்தார். இவரது முதல் ஓவரின் கடைசி 2 பந்தில் வாட்சன் (5), ரெய்னா (0) அவுட்டாகினர். பின் இணைந்த அம்பதி ராயுடு, கேப்டன் டோனி ஜோடி விக்கெட் சரிவிலிருந்து அணியை மீட்டது. உமேஷ், நேகி தலா ஒரு பவுண்டரி அடித்த தோனி, ஸ்டாய்னிஸ் பந்தில் ஒரு சிக்சர் விளாசினார். உமேஷ் வீசிய 13ஆவது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விளாசிய ராயுடு (29), யுவேந்திர சகால்  சுழலில் போல்டானார். அடுத்து வந்த ரவிந்திர ஜடேஜா (11) ரன் அவுட் ஆனார். 

அபாரமாக ஆடிய டோனி, ஸ்டைன் பந்தை சிக்சருக்குஅனுப்ப அரைசதமடித்தார். பராவோ (5) நிலைக்கவில்லை. சென்னையின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 26 ரன் தேவைப்பட்டது. உமேஷ் வீசிய 20ஆவது ஓவரின் முதல் 5 பந்தில், ஒரு பவுண்டரி, 3 சிக்சர் உட்பட 24 ரன்கள் எடுத்தார் டோனி. கடைசி பந்தில் 2 ரன் தேவைப்பட்ட நிலையில் ஷர்துல் தாகூர் (0) ரன் அவுட் ஆனார். சென்னை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 160 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. டோனி (84) அவுட்டாகாமல் இருந்தார். பின்செல்

விளையாட்டுச் செய்திகள்

img
ஜெர்மனி கோல் காவலர் மரணம்!

வயது முதிர்வு மற்றும் உடல் நல குறைவால் தில்கோவ்ஸ்கி மரணமடைந்தார்

மேலும்
img
எப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டி: அர்செனல் வெற்றி!

1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி

மேலும்
img
பிஃபா கிளப் உலகக் கோப்பை: லிவர்புல் சாம்பியன்

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிஃபா) கிளப் உலகக் கோப்பை போட்டியில்

மேலும்
img
ஆரம்பப் பள்ளிகளுக்கான கால்பந்துப் போட்டியில் கெடா வாகை சூடியது!

ஈப்போவில் நடைபெற்ற 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கால்பந்துப் போட்டியில்

மேலும்
img
சிலாங்கூர் சாம்பியன் லீக் கால்பந்துப் போட்டியில் கோலசிலாங்கூர் பத்துடுவா அணி சாம்பியன்!

சிலாங்கூர் சாம்பியன் லீக் கால்பந்துப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img