ஹைதராபாத்,
டோனி நன்றாக உள்ளார், அடுத்த போட்டியில் விளையாடுவார் எனத் தெரிகிறது என சென்னை வீரர் ரெய்னா தெரிவித்தார். ஐபிஎல் போட்டியில் மூன்று முறை கிண்ணத்தை வென்ற அணி சென்னை. நடப்பு சாம்பியனான இந்த அணி முதல் 8 போட்டியில் 7இல் வென்றது. 9ஆவது போட்டியில் முகுதுப்பகுதியில் ஏற்பட்ட பிடிப்பு காரணமாக கேப்டன் டோனி களமிறங்கவில்லை. இவருக்குப் பதில் ரெய்னா பொறுப்பேற்றார்.
இதனிடையே அடுத்து 21ஆம் தேதி பெங்களூரு போட்டியிலும் டோனி களமிறங்குவாரா என சந்தேகமாக உள்ளது. உலகக் கிண்ண தொடர் வரவுள்ள நிலையில் டோனி நன்றாக ஓய்வு எடுப்பார் என நம்பப்படுகிறது. இதுகுறித்து சென்னை அணியின் தற்காலிக கேப்டன் ரெய்னா கூறியது:
டோனி முகுகுப் பகுதி பிடிப்பு காரணமாக ஹைதராபாத் போட்டியில் பங்கேற்கவில்லை. தற்போது நன்றாக உள்ளார். அடுத்த போட்டியில் களமிறங்கி விளையாடுவார் என நம்பப்படுகிறது என்று அவர் கூறினார்.
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்