புதுடில்லி,
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் டில்லியை வீழ்த்தியது. 12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, டில்லி அணியை சந்தித்தது.டாஸ் ஜெயித்த மும்பை கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை அணி 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் சேர்த்தது. குருணல் பாண்ட்யா 37 ரன்களுடன் (26 பந்து, 5 பவுண்டரி) அவுட் ஆகாமல் இருந்தார். கடைசி 3 ஓவர்களில் மட்டும் அந்த அணி 50 ரன்கள் சேகரித்தது. டெல்லி தரப்பில் ரபடா 2 விக்கெட்டும் அக்ஷர் பட்டேல், அமித் மிஸ்ரா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 169 ரன்கள் இலக்கை நோக்கி டில்லி அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவான் (35 ரன், 22 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்), பிரித்வி ஷா (20 ரன்) ஆகியோர் நல்ல தொடக்கம் தந்தும், பின்வரிசை வீரர்கள் திணறினர்.
தொடக்க வீரர்கள் இருவரையும் சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சாஹர் காலி செய்தார். அடுத்து வந்த காலின் முன்ரோ (3), கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (3 ரன்), விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட் (7 ரன்), கிறிஸ் மோரிஸ் (11 ரன்) உள்ளிட்டோர் தாக்குப்பிடிக்கவில்லை. இதனால் ஆட்டம் மும்பை அணியின் பக்கம் திரும்பயது.
20 ஓவர்கள் முழுமையாக ஆடிய டில்லி அணியால் 9 விக்கெட்டுக்கு 128 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் மும்பை அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சாஹர் 3, பும்ரா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்