img
img

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான பூப்பந்து போட்டி!
திங்கள் 24 அக்டோபர் 2016 12:58:45

img

நெகிரி செம்பிலானிலுள்ள தமிழ்ப்பள்ளி மாணவர் களுக்கான பூப்பந்து போட்டியில் சிரம்பான் லோரோங் ஜாவா, பகாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வாகை சூடினர். சிரம்பான், பாரோய் சுக்கான் காம்ப்ளக்ஸ் விளை யாட்டு அரங்கில் நடைபெற்ற இப்பூப்பந்து போட்டியில் மாநிலம் முழுவதிலுமிருந்து 17 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே பூப்பந்து விளை யாட்டை மேம்படுத்தும் நோக்கத்திலும் உலக சாதனை விளையாட்டாளர்களை தேடும் அடிப்படையில் எஸ்எம்சி எனப்படும் ஸ்ரீ முருகன் சென்டரின் ஏற்பாட்டில் பல பிரிவுகளாக இப்போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியின் இறுதியாட்டத்தில் சிரம்பான் லோரோங் ஜாவா முதலாவதாகவும் பகாவ் தோட்ட தமிழ்ப்பள்ளி மாணவர் கள் இரண்டாவதாகவும் வந்து வெ. 1000, வெ.500 ரொக்கத்தை பரிசாக பெற்றனர். நெகிரி மாநிலத்தில் பூப்பந்துப் போட்டியில் முதலாவது, இரண்டாவது நிலைக்கு தேர்வாகிய லோரோங் ஜாவா, பகாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தேசியளவில் தமிழ்ப்பள்ளிகளிடையே நடத்தப்படும் பூப்பந்து போட்டி யில் பங்கெடுக்க வாய்ப்பு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்செல்

விளையாட்டுச் செய்திகள்

img
6ஆவது முறையாக இறுதியாட்டத்தில் கால்பதித்தது அர்ஜெண்டினா!

இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.

மேலும்
img
லியோனல் மெஸ்சி ஓய்வு!

கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியுடன் தாம் ஓய்வு பெறலாம்

மேலும்
img
கட்டார் உலகக் கிண்ணத்தில் மூன்றாவது இடத்தை பிடிக்க குரோஷியா - மொரோக்கோ மோதல்!

கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்

மேலும்
img
ஜெர்மனி கோல் காவலர் மரணம்!

வயது முதிர்வு மற்றும் உடல் நல குறைவால் தில்கோவ்ஸ்கி மரணமடைந்தார்

மேலும்
img
எப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டி: அர்செனல் வெற்றி!

1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img