இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்துப் போட்டியின் நேற்றைய ஆட்டங்களில் லெய்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் உட்பட பல முன்னணி அணிகள் வெற்றி பெற்றன. கிங் பவர் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் லெய்செஸ்டர் சிட்டி அணியினர் கிறிஸ்டல் பேளஸ் அணியை சந்தித்து விளையாடினர். இதில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய லெய்செஸ்டர் சிட்டி அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் கிறிஸ்டல் பேளஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர். லெய்செஸ்டர் சிட்டியின் வெற்றிக் கோல்களை அமட் மூசா, ஷின்சி ஓகாகி, கிறிஸ்டியன் புக் ஆகியோர் அடித்தனர். அன்பீல்ட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் வெட்புரோம்விச் அணியை சந்தித்து விளையாடினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் வெட்புரோம்விச் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர். சாடியோ மானே, பலிப்பே கோன்தின்ஹோ ஆகியோர் லிவர்பூல் அணியின் வெற்றி கோல்களை அடித்தனர். எமிரேட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அர்செனல் அணியினர் கோல் எதுவும் அடிக்காமல் மிடல்ஸ்புரோ அணியுடன் சமநிலை கண்டனர். இதர ஆட்டங்களில் ஸ்ரோக் சிட்டி, வெஸ்ட்ஹாம் யுனைடெட், பெர்ன்லி ஆகிய அணிகள் வெற்றி பெற்றன. டோட்டன்ஹாம் அணியினர் கோல் எதுவும் அடிக்காமல் ஏஎப்சி போர்ன மௌத் அணியுடன் சமநிலை கண்டனர்.
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்