இங்கிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், 22 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி தோல்வியை தழுவியது. 286 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம் 2வது இன்னிங்சில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 268 ரன்களை மட்டுமே எடுத்தது. சிட்டகாங், அகமது சவுத்ரி ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 293 ரன், வங்கதேசம் 248 ரன் எடுத்தன. இதைத் தொடர்ந்து, 48 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, 3ம் நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 228 ரன் எடுத்திருந்தது. நேற்று நடந்த 4வது நாள் ஆட்டத்தில், இங்கிலாந்து 240 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஷாகிப் ஹசன் 5 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து, 286 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம் 4ம் நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 253 ரன் எடுத்தது. இம்ருல் 43, மோமினுல் 27, ஷாகிப் 24, கேப்டன் முஷ்பிகுர் 39 ரன் எடுத்தனர். சப்பிர் ரகுமான் 59, தைஜுல் 11 ரன்னுடன் களத்தில் இருந்தனர். கை வசம் 2 விக்கெட் இருக்க, வங்கதேசம் வெற்றி பெற இன்னும் 33 ரன் தேவை என்ற பரபரப்பான நிலையில், இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. 11 ரன்களுடன் கலந்து இருந்த தைஜுல் ஸ்டோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார், அடுத்து களமிறங்கிய ஷபியுல் இஸ்லாம் விக்கெட்டையும் ஸ்டோக்ஸ் வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டார். இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கிய 19-வது நிமிடத்திலேயே போட்டி முடிவு பெற்றது.
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்