நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒரு நாள் போட்டி கள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இவ்விரு அணிகளுக்கு இடையயேயான நடந்த இரண்டு ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி ஒரு முறையும், நியூசிலாந்து அணி ஒரு முறையும் வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதிய மூன்றாவது ஒரு நாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதில் இந்திய அணியின் தலைவர் டோனியின் செயல் பாடு சிறப்பாக இருந்தது. அதை நிரூபிக்கும் வகையில் அமித் மிஸ்ரா வீசிய பந்தை நியூசிலாந்து அணியைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் லுக் ரோன்சி தடுக்க முற்பட்டார். ஆனால் அது அவரை ஏமாற்றி விக்கெட் கீப்பர் டோனியிடம் சென்றது. அடுத்த கண் இமைக்கும் நேரத்தில் டோனி ஸ்டம்பிங் செய்து அவுட் என முறையிட்டார். இதனால் இது மூன்றாவது நடுவருக்கு கொண்டு செல்லப்பட்டது. டிவி ரீப்ளேவில் பார்க்கும் போது அது அவுட் என தெரியவந்த்து.
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்