பெய்ஜிங்,
சீனாவின் குவாங்சூ நகரில் நடைபெற்ற உலக பூப்பந்து சம்மேளனத்தின் World Tour இறுதிச்சுற்று போட்டியில் இந்தியாவின் இளம் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து முதல் முறையாக வெற்றி பெற்று உலக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். இந்த பூப்பந்துப் போட்டியில் சாம்பி யன் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து என்பது குறிப்பிடத்தக்கது. ஜப்பான் வீராங்கனையான நஜோமி ஒகுஹராவை அவர் தோற்கடித்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற இறுதிப்போட்டியில் இதே ஜப்பான் வீராங்கனையிடம் அடைந்த தோல்விக்கு இந்த முறை சிந்து பழிதீர்த்துக்கொண்டார்.
மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதி ஆட்டத்தில் கடந்த ஆண்டைப் போல் இந்த முறையும் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவும், ஜப்பான் வீராங்கனை நஜோமி ஒகுஹாராவும் மோதினார்கள்.ஆட்டம் தொடங்கியதில் இருந்து சிந்து பம்பரம் போல் சுழன்று, ஆவேசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆட்டம் தொடங்கியதில் இருந்தே சிந்து ஆதிக்கம் செலுத்தினார்.
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்