உலக அளவில் அனைத்து நாடுகளும் விண்வெளி ஆராய்ச்சியில் அசாத்திய சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. அந்த வரிசையில் தற்போது ஜப்பானின் விண்வெளி நிறுவனம், தொலைதூர விண்கல்லான ரயுகுவின் மேற்பரப்பில் உள்ள பாறைகளை அழகாகப் படம் எடுத்து வெளியிட்டுள்ளது. ஜப்பான் ஏரோஸ்பேஸ் எக்ஸ்ப்ளோரஷன் ஏஜென்சிஸ் ( JAXA) என்ற நிறுவனம் செலுத்திய ஹயபுஷா-2 என்ற விண்கலம் கடந்த வெள்ளிக்கிழமை பூமியிலிருந்து 170 மில்லியன் மைல் தொலைவில் உள்ள ரயுகு என்ற விண்கல்லின் மேற்பரப்பில் உள்ள பாறைகளை படமெடுத்து அனுப்பியது. இது 2,953 அடி அளவுடையது ஆகும்.
இவை மினர்வா A 1 ஆல் எடுக்கப்பட்டது. இதன் ரோவர் 49 அடி உயரத்தில் பறந்துகொண்டே இருக்கும், விண்கல்லின் ஈர்ப்பு விசையை எதிர்த்து ரோவரை இயக்குவது கடினம். இந்த ஹயபுஷா-2 விண்கலமானது டிசம்பர் 3, 2014-ல் விண்ணில் ஏவப்பட்டது, ஜூன் 27, 2018 ல் ரயுகுவைச் சென்ற டைந்தது. 2019-ன் இறுதிக்குள் ரயுகு கோளிலிருந்து திரும்ப உள்ளது. பூமிக்கு 2020-ல் வந்து சேரும் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்தப் படங்கள் சூரிய ஒளி பிரதிபலிக்கும் நேரத்தில் இடதுபுற மங்கலான நிறமாகக் காட்சியளிப்பதாக எடுக்கப்பட்டுள்ளது.
JAXA வின் டாக்சி குடோடா கூறுகையில், ``மினர்வா ll.1 இன் பல நாள் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி. இதனால் மிகப்பெரிய பெருமை கிடைத்து ள்ளது" என்கிறார். இதன் ரோவர் விண்கல்லின் வெப்பநிலை, சீதோஷ்ணம் எனப் பல்வேறு சோதனைகளுக்காக அனுப்பப்பட்டது. இதன் மாஸ்காட் இயந்திரம் ஜெர்மன் விண்வெளி மையத்தால் தயாரிக்கப்பட்டது. இந்த ரயுகு விண்கல்லை அடுத்து விண்வெளி ஆய்வு மற்றும் விண்வெளி மையம் உருவான அமைப்பையும் கண்டறிய விஞ்ஞானிகள் முயன்று வருகிறார்கள்.
உள்ள ரயுகு என்ற விண்கல்லின்
மேலும்ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் இயங்கும் பீட்டா
மேலும்இன்றோ பேசுவதற்கு மட்டுமின்றி, பல வகைகளில்
மேலும்