img
img

ஒருவர் எத்தனை ஆண்டு காலம் உயிர் வாழ்வார் என கண்டறிய புதிய தொழில் நுட்பம்
சனி 17 ஜூன் 2017 15:16:18

img

ஒருவர் எத்தனை ஆண்டு காலம் உயிர் வாழப் போகிறார் என்பதை கண்டுபிடிக்க ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (Artificial intelligence - AI) ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டு பல்கலைகழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், இந்த புது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளார்கள். இந்த தொழில்நுட்பமானது, மனித உறுப்புகளை சி.டி.ஸ்கேன் மூலம் புகைப்படம் எடுத்து வைத்து அதை ஆராய்ந்து, அவர் இன்னும் எத்தனை ஆண்டு காலம் உயிருடன் இருப்பார் என்பதை கணக்கிட்டு கூறுகிறது.இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் முடிவை மருத்துவர்கள் அளிக்கும் முடிவு களோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் அது 69 சதவிகிதம் துல்லியமாக இருந்தது தெரியவந்தது. இந்த ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புக் குழுவில் உள்ள லுக் ஓக்டென்-ரேனர் கூறுகையில்,ஒருவரின் உடலில் வருங்காலத்தில் ஏற்படும் மாற்றங்களை கணிப் பது மிகவும் உபயோகமானது. ஏனெனில் அதற்கு சிகிச்சையளிக்க மருத்துவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். அதிலும் ஒருவர் எவ்வளவு ஆண்டுகாலம் வாழ்வார், என்பதை மருத்துவர் கண்டுபிடிப்பது மிகவும் அரிதான ஒன்று.அந்த வகையில் ஒருவரின் உட லுக்குள் ஒவ்வொரு உறுப்பின் ஆரோக்கியத்தை கண்டுபிடிக்க, இந்த தொழில்நுட்பம் உதவியாக இருக்கும்.எங்களின் இந்த ஆராய்ச்சி மருத்துவ பட பகுப் பாய்வுத் துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஒரு புதிய வாயிலை திறந்துள்ளது. வருங்காலத்தில் இந்த தொழில்நுட்பம் நோய்களை வரும் முன்னபே கண்டறிந்து, அதற்கான சிகிச்சையை முன்கூட்டியே அளிக்க உதவும் என்று கூறியுள்ளார்.

பின்செல்

தொழில்நுட்பம்

img
முதன்முதலில் விண்கல்லிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள்! - வெளியிட்டது ஜப்பான்

உள்ள ரயுகு என்ற விண்கல்லின்

மேலும்
img
ஐ-ஃபோன் யுசர்களே, இந்த அப்டேட் வந்துவிட்டதா..?

முதலில் ஐ-ஃபோன் சீரியஸ்களில் எதுவெல்லாம்

மேலும்
img
`7 நிமிடம் 1 மணி நேரமானது' - விரைவில் வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்

ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் இயங்கும் பீட்டா

மேலும்
img
உடலையும் மனதையும் பாதிக்கும் செல்போன் அடிக்‌ஷன்... கவனம்!

இன்றோ பேசுவதற்கு மட்டுமின்றி, பல வகைகளில்

மேலும்
img
ஒருவர் எத்தனை ஆண்டு காலம் உயிர் வாழ்வார் என கண்டறிய புதிய தொழில் நுட்பம்

அறிவியல் சாதனை:

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img