img
img

உடலையும் மனதையும் பாதிக்கும் செல்போன் அடிக்‌ஷன்... கவனம்!
சனி 03 மார்ச் 2018 16:09:50

img

`வும் செல்போனின் நச்சரிப்பை அணைத்து, கொஞ்சம் சில்வண்டின் உச்சரிப்பைக் கேட்போம்…’ பத்து வருடங்களுக்கு முன்னர் வெளியான ’சிவாஜி’ படத்தில், ‘பல்லேலக்கா...’ பாடலில் இடம்பெற்ற வரிகள் இவை. அப்போது பேசுவதற்கு மட்டுமே அதிகளவில் செல்போன்கள் பயன்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. பேசுவதற்காக மட்டும் வரும் அழைப்பு மணிகளையே நச்சரிப்பாகக் கருதி, செல்போனை அணைத்து, வண்டின் ரீங்காரத்தைக் கேட்க வலியுறுத்தினார் கவிஞர். இன்றோ பேசுவதற்கு மட்டுமின்றி, பல வகைகளில் பரிணாம வளர்ச்சி அடைந்து ’ஸ்மார்ட் போன்கள்’ என்ற பெயரில், செல்போன்கள் சமர்த்தாக மாறிவிட்டன. செல்போன்களின் பயன்பாடும் பல மடங்கு அதிகரித்துவிட்டது. இன்றைய நிலையில் செல்போன்களின் நச்ச ரிப்பைப் பற்றி, பாடல் வரிகள் அல்ல, பல பாடல்கள் எழுதலாம். 

செல்போன்களுக்காக ஏங்குகிறோம்!

விரல் நுனியில் உலகம், நினைத்த நேரத்தில் தொடர்பு, கருத்துப் பரிமாற்றம், பாதுகாப்பு, செய்திகள்... என செல்போன்களால் பலவித நன்மைகள் இருக்கி ன்றன என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. ’அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு’ செல்போன் பயன்படுத்துவோருக்கும் இது பொருந்தும். பேசுவ தற்கும், பல விஷயங்களைத் தெரிந்துகொள்வதற்கும் அவ்வப்போது செல்போன்களைப் பயன்படுத்திக்கொள்வதில் தவறே இல்லை. கால வரைமுறை இல்லாமல் செல்போன்களைப் பயன்படுத்தத் துடிப்பதுதான் தவறு. `வேறு வேலை செய்துகொண்டிருந்தாலும், செல்போன் அழைப்பு மணிக்காகவோ, வாட்ஸ்அப் போன்ற செயலிகளின் ஒலிகளுக்காகவோ பெரும்பாலோரின் மனம் ஏங்கிக்கிடக்கின்றன’ என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அழைப்பு ஒலிகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் வரவில்லையெனில், உடலுக்குள் பதற்றமான சூழ்நிலை (Anxiety) உருவாவதாகக் கூறப்படுகிறது.

புதிதாக முளைத்த உறுப்பு

மதுவைப்போல செல்போன்களும் போதைப் பொருளாக உருமாறி இருப்பது, இன்றைய காலத்தில் குறிப்பிடப்படவேண்டிய ஒன்று. இருபத்தி நான்கு மணி நேரமும் செல்போன்கள் நமது உடலோடு ஒட்டிக்கொண்டேதான் இருக்கின்றன. காலையில் விழிக்கச் செய்யும் அலாரத்தில் தொடங்கி, மணிக்கணக்கில் பேசுவது, வணிகம், அரட்டை என நீண்டு, இரவில் தாலாட்டுப் பாடி நம்மை உறங்கச் செய்வதுவரை செல்போன்கள்தான். சில நேரத்தில் தூக்கத்தைக் கெடுப்பதும் செல்போன்களே. நாம் உறங்கும்போது, நம் தலைக்கு அருகிலேயே, நம்மை ரசித்துக்கொண்டே கொட்டக் கொட்ட விழித்திருக்கின்றன செல்போன்கள்! நேரம் இல்லாத மா மனிதர்களுக்கு, சாப்பிடும்போதும் செல்போனில் பேசிக்கொண்டே சாப்பிட வேண்டிய சூழல். குளிக்கும்போதுகூட பிளாஸ்டிக் பேப்பரால் செல்போனை மூடி, ’லவுடு ஸ்பீக்கரில்’ பேசவேண்டிய கட்டாயத்தில் இளைய சமுதாயம் இருக்கிறது. நமது உடலில் புதிதாகத் தோன்றிய நவீன உறுப்பு என்றுகூட செல்போனைச் சொல்லலாம். புதிதாக உருவாகியிருக்கும் செல்போன் எனும் உறுப்பை அதிகமாகப் பயன்படுத்தி னால் ஆபத்தான உறுப்பாக மாறலாம், கவனம் தேவை!

ஆதாரம் தேவையா?

’செல்போன்களை அதிக நேரம் பயன்படுத்தினால், உடல் நிலை பாதிக்கப்படும்’ என்று குரல் கொடுத்தால், நம்மை விநோதமாகப் பார்க்கும் சமுதா யத்தில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ’அறிவியலுக்கு எதிரானவன்’ (Anti-Science) என்ற புனைப்பெயரும் கிடைக்கலாம். ’தொடர்ந்து நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்தினால் உடல் பாதிக்கப்படும் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை’ என்கின்றன பெரு நிறுவனங்கள். ’நான் பத்து வருடத்த்துக்கும் மேலாக செல்போன் பயன்படுத்திவருகிறேன். எனக்கு எந்த பாதிப்பும் வரவில்லையே’ என்று பலர் எதிர்வாதமும் செய்யலாம்.

ஆனால், அதிகளவில் செல்போன் பயன்படுத்தும்போது, நமது உடலில் உண்டாகும் மாறுதல்களை நாமே கவனித்திருப்போம். பாதிப்புகளுக்கு ஆதாரம் நாம்தான்! செல்போன் பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்பட்டால்தான் பாதிப்பு என்பதில்லை. தலைவலி, எரிச்சல், சோர்வு, பதற்றம் போன்றவை தோன்றினாலும் பாதிப்புதான். ’பூச்சிக்கொல்லிகளால் பூச்சிகளைத் தவிர வேறு யாருக்கும் பாதிப்பில்லை’ என்றுதான் அதை முதலில் அறிமுகப்படுத்தி னார்கள். ஆனால், அவற்றால் நமது சூழலே மாறிவிட்டதை அவர்களால் மறுக்க முடியுமா? 

உடலே சாட்சி!

நேரடியாக செல்போன்களைக் காதில் வைத்துப் பேசும்போது, காது மடல்கள் எவ்வளவு சூடாகின்றன? நீண்ட நேரம் பேசிய பிறகு, ’விங்ங்...’ என்ற ஒலி காதுக்குள் கேட்பதை உணர்ந்திருக்கலாம். செயற்கையாக ஓர் ஒலி தன்னிச்சையாக எழுகிறது என்றால் செவிப்பறை பாதிக்கப்பட்டிருக்கிறது என்றுதானே அர்த்தம்? இரவில் இருட்டறைக்குள் செல்போன் வெளிச்சத்தை நேரடியாகக் கண்ணில்பட அனுமதிக்கும்போது, பார்வை சில நிமிடங்கள் மங்குவதை உணரலாம்.

வாட்ஸ்அப், ஃபேஸ்புக், மேலும் சில செயலிகளைப் பயன்படுத்திய பின்னர், நமது மனநிலையில் உண்டாகும் வித்தியாசமான மாறுதல்களை உணர்ந்தி ருப்போம். இவையெல்லாம் உடல்நிலையை பாதிக்காமல், மேம்படுத்தவா செய்கின்றன? தொடர்ந்து இப்படிக் காதுகளையும் கண்களையும் அவ திக்குள்ளாக்கினால் இளம் வயதிலேயே அவை சோர்வடைந்துவிடும். ’செல்போனால் உடலும் மனமும் பாதிக்கப்படுகின்றன என்பதற்கு ஆதாரம் வேண்டும்’ என்று காத்துக்கிடந்தால், உங்கள் உடல்நிலையே விரைவில் உங்களுக்கு எதிராக சாட்சி சொல்லும்.

மன நிம்மதி

செல்போன்களைப் பயன்படுத்துவதில் கடந்த தலைமுறைக்கும் இப்போதைய தலைமுறைக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? கடந்த தலைமுறையினர், தேவைக்கேற்ப செல்போன்களைப் பயன்படுத்துகிறார்கள். நாமோ தேவைக்குப் போக, முழு நேரமும் செல்போன்களின் துணையுடனேயே வாழ்கிறோம். சிற்சில பாதிப்புகள் இருப்பது தெரிந்தும், அதற்குப் பழகிவிட்டது நமது வாழ்க்கை முறை. ’செல்போன் இல்லாமல் ஒரு நாள் நம்மால் நிம்மதியாக வாழ முடியுமா?’ என்பது நியாயமான கேள்விதான். ஒரே ஒருநாள், செல்போன் தொடர்பு இல்லாத மலைப்பகுதியில் நேரத்தைச் செலவிட்டு பின்னர் தினசரி அலுவல்களுக்குத் திரும்புங்கள். மன நிம்மதி என்பதற்கான முழு அர்த்தமும் தெளிவாக விளங்கும். 

ஒற்றைத் தொலைப்பேசி, பன்மைத் தொலைப்பேசியாக மாறிய கதை!

கால் நூற்றாண்டுக்கு முன்னர், தெருவில் உள்ள ஏதோ ஒரு வீட்டில்தான் தொலைபேசி வசதி இருந்தது. அவசரச் செய்திகளைப் பரிமாற, அந்தத் தொலைபேசிதான் மிக முக்கியச் சாதனமாக இருந்தது. இன்றோ ஒவ்வொருவர் கையிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட செல்போன்கள். ‘இது குழந்தை யோட போன்’ என்ற தனித்த பெருமை வேறு சிலருக்கு உண்டு. ‘என்னோட மூணு வயசுக் குழந்தை, இப்பவே அவனுக்குப் பிடிச்ச பாட்டை யூடியூப்ல போட்டு மணிக்கணக்குல பார்த்துக்கிட்டே இருக்கான்… செல்போன் இருக்கிறதால நமக்குக் கொஞ்சம் நேரம் மிச்சமாகுது…’ இந்தச் சூழலைப் பெற்றோர்க ளாகிய நீங்கள் ரசிக்கிறீர்கள் என்றால், உங்கள் பிள்ளைகளுக்கு சூனியம் வைக்கிறீர்கள் என்று அர்த்தம். தயவுசெய்து அடுத்த தலைமுறைக் குழந்தை களுக்கு, பிறந்தது முதலே செல்போன்களை அறிமுகப்படுத்த வேண்டாம். குழந்தைப் பருவத்திலேயே மூக்குக்கண்ணாடி அணிய வேண்டிய சூழல் நிச்சயமாக உருவாகும். வருங்காலத்தில் செல்போன் சார்ந்த சில பாதிப்புகளை அறிவியல் நிரூபிக்கலாம். 

பொருந்தாக் காதல்!

`காலை எழுந்ததும் வலது உள்ளங்கை, தாமரை மலர், கண்ணாடி போன்றவற்றில் கண்விழித்தால், உடலுக்கும் மனதுக்கும் நல்லது’ என்று சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. ஆனால், பெரும்பாலோனோர் கண் திறப்பது, வெளிச்சம் நிறைந்த செல்போன் திரையில்தான். காலை எழுந்தவுடன் அலை பேசியைத்தானே நாம் தேடுகிறோம்? அதன் மீது நமக்கு ஒரு விபரீதமான ’பொருந்தாக் காதல்’ என்று வைத்துக்கொள்ளலாம். ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு வகையில் செல்போன்கள் மீது அப்படியொரு அடிக்‌ஷன் (Addiction). 

செய்ய வேண்டியவை, கூடாதவை!

இரவில் மின்விளக்குகளை அணைத்துவிட்டு, செல்போன்களைப் பயன்படுத்தினால் கண்கள் பாதிக்கப்படுவது உறுதி. முடிந்த அளவுக்கு அலைபேசியை நேரடியாகக் காதில்வைத்துப் பேசுவதைத் தவிர்த்துவிட்டு, தரமான ஹெட்போன் அல்லது ஹெட்செட்களைப் பயன்படுத்தலாம். வாகனம் ஓட்டும்போது எந்தக் காரணத்தைக் கொண்டும் செல்போனைப் பயன்படுத்த வேண்டாம். விபத்துகளின் எண்ணிக்கை பெருகுவதற்கு செல்போன் பேசிக்கொண்டே வாக னம் ஓட்டுவது முக்கியமான காரணம். இரவில் தூங்கும்போது, செல்போனை ‘Flight mode’-க்கு மாற்றிவிடுவது நல்லது. உறங்கும்போதாவது செல்போனி லிருந்து வெளியாகும் கதிர்வீச்சின் பாதிப்பைத் தவிர்க்கலாமே! செல்போன்களைப் பயன்படுத்தாமல் இருக்க முடியாது! ஆனால், செல்போன்களை அதிகமாகப் பயன்படுத்துவதை தாராளமாகத் தவிர்க்க முடியும். 

பின்செல்

தொழில்நுட்பம்

img
முதன்முதலில் விண்கல்லிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள்! - வெளியிட்டது ஜப்பான்

உள்ள ரயுகு என்ற விண்கல்லின்

மேலும்
img
ஐ-ஃபோன் யுசர்களே, இந்த அப்டேட் வந்துவிட்டதா..?

முதலில் ஐ-ஃபோன் சீரியஸ்களில் எதுவெல்லாம்

மேலும்
img
`7 நிமிடம் 1 மணி நேரமானது' - விரைவில் வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்

ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் இயங்கும் பீட்டா

மேலும்
img
உடலையும் மனதையும் பாதிக்கும் செல்போன் அடிக்‌ஷன்... கவனம்!

இன்றோ பேசுவதற்கு மட்டுமின்றி, பல வகைகளில்

மேலும்
img
ஒருவர் எத்தனை ஆண்டு காலம் உயிர் வாழ்வார் என கண்டறிய புதிய தொழில் நுட்பம்

அறிவியல் சாதனை:

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img