வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பி அதை 7 நிமிடத்துக்குள் டெலீட் செய்யும் வசதியை ஒரு மணி நேரமாக நீட்டித்துள்ளது வாட்ஸ்அப் நிறுவனம்.
தற்போது உலகின் தவிர்க்க முடியாத செயலியாக உருவெடுத்துள்ளது வாட்ஸ்அப் செயலி. இது குறுஞ்செய்தி அனுப்புவது முதல் அலுவலக உபயோகம் வரை என அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. கடந்த வருடம் முதல் வாட்ஸ் அப்பில் தொடர்ந்து அப்டேட்டுகள் வந்த வண்ணம் உள்ளன. முன்னதாக எமோஜி முப்பரிமாண முறையில் அப்டேட் செய்ததில் தொடங்கி தற்போது வரை பல அப்டேட்டுகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன.
அந்த வரிசையில், சில மாதங்களுக்கு முன்னர், ஒருவருக்கு அனுப்பிய செய்தியை அவருக்கு காட்டாமல் 7 நிமிடங்களுக்குள் டெலீட் செய்ய முடியும் என்ற வசதி புதிதாக நடைமுறைக்கு வந்தது. தற்போது அந்த வசதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ் அப். டெலீட் ஃபார் எவ்வரிஒன் (Delete for Everyone) என்ற புதிய அப்டேட்டின் மூலம் ஒருவருக்கு அனுப்பிய செய்தியை ஒரு மணிநேரத்துக்குள் டெலீட் செய்ய முடியும். இந்த வசதியை அனைத்து ஆண்ட்ராய்டு போன்களிலும், வாட்ஸ் அப் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதற்கு முன்னோட்டமாக ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் இயங்கும் பீட்டா வெர்ஷனில் மட்டும், இந்த வசதி தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. விரைவில் இது முழுமையான பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, மேலும் ஒரு அப்டேட்டையும் வெளியிட உள்ளது வாட்ஸ் அப் நிறுவனம். தற்போது ஐ.ஓ.எஸ் போன்களில் உள்ள `லாக்டு வாய்ஸ் ரெக்கார்டிங்’ (locked voice recording) வசதியை ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் இயங்கும் போன்களுக்கும் அளிக்க அந்த நிறுவனம் முடிவு செய்து ள்ளது. தற்போதைய சூழலில் ஆண்ட்ராய்டு போன்களிலும் வாய்ஸ் மெஸ்சேஜ் அனுப்ப வேண்டும் என்றால் அதில் உள்ள வாய்ஸ் பட்டனை அழுத்திப் பிடித்துக்கொண்டு பேச வேண்டும். பேசி முடித்த உடன் அந்தப் பட்டனை விட்டுவிட்டால் வாய்ஸ் மெஸ்சேஜ் தானாக சென்றுவிடும். ஆனால், தற்போது அதை மாற்றி ஒருமுறை மட்டுமே வாய்ஸ் பட்டனை அழுத்திவிட்டு, பேசி முடித்தவுடன் மீண்டும் அழுத்தினால் போதும். ஐ.ஓ.எஸ் போன்களில் மட்டுமே இருந்த இந்த வசதி, விரைவில் அனைத்து ஆண்ட்ராய்டு போன்களிலும் வர உள்ளது.
உள்ள ரயுகு என்ற விண்கல்லின்
மேலும்ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் இயங்கும் பீட்டா
மேலும்இன்றோ பேசுவதற்கு மட்டுமின்றி, பல வகைகளில்
மேலும்