img
img

ஐ-ஃபோன் யுசர்களே, இந்த அப்டேட் வந்துவிட்டதா..?
செவ்வாய் 25 செப்டம்பர் 2018 14:35:50

img

புதிதாக ஆப்பிள் ஐ-ஃபோன் ஐ.ஓ.எஸ். 12, இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி வெளிவந்தது. இதற்கு முன்பாக ஐ-ஃபோன் ஐ.ஓ.எஸ் சீரியஸில் பல ஃபோன்கள் வெளிவந்து இருக்கிறது. அதை எல்லாம் ஐ-ஃபோன் ஐ.ஓ.எஸ் 12-க்கு அப்டேட் செய்துகொள்ளலாம், அந்த அப்டேட்க்கான வழிமுறை களும் அப்படி அப்டேட் செய்யும்முன் ஐ-ஃபோனில் என்னென்ன விஷயங்களை எல்லாம் செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்வோம்.

முதலில் ஐ-ஃபோன் சீரியஸ்களில் எதுவெல்லாம் அப்டேட் செய்யலாம் என்றால், இதுவரை வந்த அனைத்து சீரியஸ்களையும் அப்டேட் செய்து கொள்ளலாம். சரி இதை எப்படி அப்டேட் செய்வது. மிக எளிமையான சில வழிமுறைகளில் இதை செய்து முடித்துவிடலாம்.

முதலில் அப்டேட் செய்யும்முன் உங்கள் ஐ-ஃபோனை பி.சி.இல், யு.எஸ்.பி. கேபிள் மூலம் கனேக்ட் செய்ய வேண்டும். பிறகு உங்கள் பழைய ஐ-ஃபோனில்  இருக்கும் தரவுகளை எல்லாம் பேக்அப் எடுத்துக்கொள்ள வேண்டும், இதற்கு போதுமான ஸ்டோரேஜ் அளவை வைத்திருக்க வேண்டும்.

அப்டேட் செய்வதற்கு ஐ-க்ளோவ்வுட் (iCloud) அல்லது ஐ-டியுன்ஸ் (iTunes) ஆகியவைகளை பயன்படுத்தி வைஃபை முலம் அப்டேட் செய்துகொள்ளலாம். முதலில் செட்டிங்ஸ்->ஜெனரல்->சாஃப்ட்வேர் அப்டேட் அதன் பிறகு ஓகே செய்து அப்டேட் செய்துகொள்ளலாம். அதிகமானோர் அப்டேட் செய்வதால், சாஃப்ட்வேர் டவுன்லோட் ஆவதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியமாக உங்கள் பாஸ்வர்ட் மற்றும் யூசர் ஐ.டி இரண்டையும் நினைவில்கொள்ள வேண்டும்.  

பின்செல்

தொழில்நுட்பம்

img
முதன்முதலில் விண்கல்லிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள்! - வெளியிட்டது ஜப்பான்

உள்ள ரயுகு என்ற விண்கல்லின்

மேலும்
img
ஐ-ஃபோன் யுசர்களே, இந்த அப்டேட் வந்துவிட்டதா..?

முதலில் ஐ-ஃபோன் சீரியஸ்களில் எதுவெல்லாம்

மேலும்
img
`7 நிமிடம் 1 மணி நேரமானது' - விரைவில் வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்

ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் இயங்கும் பீட்டா

மேலும்
img
உடலையும் மனதையும் பாதிக்கும் செல்போன் அடிக்‌ஷன்... கவனம்!

இன்றோ பேசுவதற்கு மட்டுமின்றி, பல வகைகளில்

மேலும்
img
ஒருவர் எத்தனை ஆண்டு காலம் உயிர் வாழ்வார் என கண்டறிய புதிய தொழில் நுட்பம்

அறிவியல் சாதனை:

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img