போர்ச்சுக்கள் நாட்டைச் சேர்ந்த நட்சத்திர வீரர் கிறிஸ்டியன் ரொனால்டோவின் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. ரொனால்டோவுக்கு சொந்தமான 15 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள தனியார் விமானம் கடந்த திங்கள் அன்று பார்சிலோனாவில் உள்ள இஐ விமான நிலையத்தில் தரையிரக்க முற்பட்டுள்ளது. ஆனால் தரையிரங்குவதற்காக விமான ஓட்டுநர் விமானத்தின் கியரை பயன்படுத்தும் போது, தொழில் நுட்ப கோளாறு காரணமாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. விமானத்தை கட்டுபடுத்த முடியாத காரணத்தினால், விமானம் தரையில் முட்டி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. அதிர்ஷ்டவசமாக விமானத்தில் யாரும் பயணம் செய்யாத காரணத்தினால், விமான ஒட்டுநருக்கு மட்டும் சிறிதாக காயம் ஏற்பட்டுள்ளது. விமானத்தின் பாகங்கள் முக்கியமானவை சில உடைந்துள்ளன. இது குறித்து ரொனால்டோ கூறுகையில், இது பார்சிலோனா கால்பந்து கிளப்பிற்கு சொந்தமானது. ஆனால் இது தன்னுடைய சொந்த பயனங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார். விமான விபத்து நடந்த தினத்தன்று ரொனால்டோ ஜேர்மனியில் நடத்தப்பட்ட ரியல் மாட்ரிட் சாம்பியன் லீக் தொடரில் விளையாடி வந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்