காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில், தொடர்ந்து பதக்கங்களை வென்று இந்திய வீரர்கள் அசத்தி வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவின் கோல் கோஸ்ட் நகரில், 21-வது காமன்வெல்த் போட்டிகள் கலைநிகழ்ச்சிகளுடன் கடந்த 4-ம் தேதி துவங்கியது. 11 நாள்கள் நடக்கும் இந்த காமன்வெல்த் போட்டிகளில், மொத்தம் 71 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.
பளுதூக்குதல், துப்பாக்கி சுடுதல், டேபிள் டென்னிஸ் போன்ற போட்டிகளில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்களைக் குவித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபில் துப்பாக்கிச் சுடும் போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த அபூர்வி சண்டேலா மற்றும் மெகுலி கோஷ் ஆகி யோர் பங்கேற்றனர். இதில், மெகுலி கோஷ் வெள்ளிப்பதக்கமும், அபூர்வி சண்டேலா வெண்கலப்பதக்கமும் வென்றுள்ளனர்.
முன்னதாக நடைபெற்ற ஆண்களுக்கான ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், இந்திய வீரர் ஜித்துராய் தங்கப்பதக்கம் வென்றார். இதேபோல, பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இந்தியாவின் மனு பார்க்கர் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். தொடர்ந்து, துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர்கள் ஆதிக்க ம்செலுத்திவருகின்றனர். காமன் வெல்த் போட்டிகளில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்களை வென்று வருவதால், மொத்தம் 17 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்