ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியில், இந்தியாவுக்கு இதுவரை எட்டு தங்கப்பத க்கங்கள் கிடைத்துள்ளன.
21-வது காமன்வெல்த் போட்டிகள், கலைநிகழ்ச்சிகளுடன் ஆஸ்திரேலியாவின் கோல் கோஸ்ட் நகரில் கடந்த 4-ம் தேதி துவங்கியது. 11 நாள்கள் நடக்கும் இந்த காமன்வெல்த் போட்டிகளில், மொத்தம் 71 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்தியா, வெள்ளிப்பதக்கத்துடன் தன் பதக்கப் பட்டியலைத் தொடங்கியது. முதல் நாளில் 56 கிலோ பளு தூக்கும் போட்டியில், கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த கே.பி. குருராஜ், வெள்ளிப்பதக்கத்தை வென்று அசத்தினார்.
இதையடுத்து, தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர் சதீஷ் சிவலிங்கம் பளு தூக்கும் போட்டியின் 77 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்றார். நேற்று ,மகளிர் 69 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில், இந்திய வீராங்கனை பூனம்யாதவ் தங்கப்பதக்கம் வென்றார். மேலும், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதலில், இந்திய வீராங்கனை மனு பாக்கர் தங்கப்பதக்கம் வென்றார்.
இந்நிலையில், பதக்கப் பட்டியலில் இந்தியாவுக்கு இன்றும் இரண்டு பதக்கங்கள் சேர்ந்துள்ளன. ஆடவர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் ஜீத்துராய் தங்கம் வென்றார். அதேபோன்று, ஆடவர் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் ஓம் மிதர்வாலுக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்துள்ளது. பதக்கப் பட்டியலில் தற்போதுவரை 15 (8 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் ) பதக்கங்களுடன் இந்தியா மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 85 பதங்கங்களுடன் ஆஸ்திரேலியா முதல் இடத்திலும் 48 பதங்கங்களுடன் இங்கிலாந்து இரண்டாவது இடத்திலும் உள்ளது.
கனடாவை வீழ்த்தி, இந்தியா மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. கனடாவின் மொத்த பதக்கங்களின் எண்ணிக்கை 32. இந்தியாவைவிட அதிகம். ஆனால் இந்தியா 8 தங்கம் வென்றுள்ளது. கனடா 7 தங்கம்தான். எனவே, பதக்கப்பட்டியலில் கனடா பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்