img
img

நியூசிலாந்தின்
வெள்ளி 30 செப்டம்பர் 2016 17:20:02

img

இந்தியா, நியூசிலாந்து இடையிலான கொல்கத்தா 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு இன்று தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஷிகர் தவானை குறி வைத்துத் தூக்கி விட்டது நியூசிலாந்து. முதல் வி்க்கெட்டை இழந்த நிலையில் மிகுந்த கவனத்துடன் இந்தியா ஆடி வருகிறது. இந்தியா நியூசிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி இன்று கொல்கத்தாவில் தொடங்கியது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் கே.எள். ராகுலுக்குப் பதில் ஷிகர் தவான் சேர்க்கப்பட்டார். கம்பீர் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தவானுக்கு இடம் கிடைத்தது. ஆனால் தவான் ஏமாற்றி விட்டார். ஒரே ரன்னில் அவர் ஆட்டமிழந்தார். அவரை குறி வைத்துத் தூக்கி விட்டார் நியூசிலாந்தின் ஹென்றி. தற்போது முரளி விஜய்யும், சட்டேஸ்வர் புஜராவும் ஆடி வருகின்றனர். முன்னதாக இந்திய அணி கேப்டன் கோஹ்லி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் 2வது மாற்றமாக உமேஷ் யாதவுக்குப் பதில் புவனேஷ் குமார் இன்று சேர்க்கப்பட்டுள்ளார். மறுபக்கம் நியூசிலாந்து அணியின் கேப்டன் கனே வில்லியம்சன் காய்ச்சல் காரணமாக இன்று ஆடவில்லை. அவருக்குப் பதில் ராஸ் டெய்லர் கேப்டனாக பணியாற்றுகிறார். இப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தைப் பிடிக்கும் என்பதால் இந்திய அணியும், ரசிகர்களும் வெற்றியைக் குறி வைத்து காத்துள்ளனர்.

பின்செல்

விளையாட்டுச் செய்திகள்

img
6ஆவது முறையாக இறுதியாட்டத்தில் கால்பதித்தது அர்ஜெண்டினா!

இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.

மேலும்
img
லியோனல் மெஸ்சி ஓய்வு!

கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியுடன் தாம் ஓய்வு பெறலாம்

மேலும்
img
கட்டார் உலகக் கிண்ணத்தில் மூன்றாவது இடத்தை பிடிக்க குரோஷியா - மொரோக்கோ மோதல்!

கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்

மேலும்
img
ஜெர்மனி கோல் காவலர் மரணம்!

வயது முதிர்வு மற்றும் உடல் நல குறைவால் தில்கோவ்ஸ்கி மரணமடைந்தார்

மேலும்
img
எப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டி: அர்செனல் வெற்றி!

1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img