99 வயது ஆஸ்திரேலிய நீச்சல் வீரர் ஜார்ஜ், 50 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் நீச்சல் போட்டியில் புதிதாக உலக சாதனை படைத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி காமன்வெல்த் நீச்சல் போட்டிக்கான சோதனை நிகழ்வு நடைபெற்றது. அதில் 100 - 104 வயதோருக்கான நீச்சல் போட்டியில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜார்ஜ் கோரோன்ஸ் பங்குபெற்றார்.
99 வயதான ஜார்ஜ் வரும் ஏப்ரலில் 100 வயதை எட்டுகிறார். 50 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் நீச்சல் போட்டியில் யாரும் எதிர்பார்த்திராத உலக சாதனை படைத்துள்ளார் ஜார்ஜ். 2014-ம் ஆண்டு, 100 -104 வயதினோருக்கான பிரிவில் கனடா நீச்சல் வீரர், 50 மீட்டர் தூரத்தை 1 நிமிடம் 31 விநாடிகளில் கடந்தது உலக சாதனையாகக் கருதப்பட்டது. நேற்று முன் தினம் நடந்த நீச்சல் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஜார்ஜ், 50 மீட்டர் தூரத்தை அசால்ட்டாக 56.12 விநாடிகளில் கடந்து உலக சாதனையை முறியடித்து, புதிய மைல்கல்லை உருவாக்கியுள்ளார். அவரின் வீடியோ இணையத்தில் செம்ம வைரல்.
போட்டி முடிந்து நீச்சல் குளத்திலிருந்து வெளியே வந்ததும் ஊடகங்கள் அவரிடம் மைக்கை நீட்டின... ``அனைவருக்கும் நன்றி... உங்கள் கைத்தட்ட ல்கள் என்னை உற்சாகப்படுத்தின’’ என்றார் கூலாக. மேலும் பேசிய அவர், ``நான் சிறிய வயதிலிருந்தே நீச்சல் பயிற்சியெல்லாம் எடுக்கவில்லை. 80 வயதில்தான் நீச்சலில் ஆர்வம் அதிகரித்தது. ஒன்றைக் கற்றுக்கொள்ள வயது தடையில்லை’’ என்றார்.
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்