பெட்டாலிங்ஜெயா,
கட்டொழுங்கில்லாத ஆட்டக்காரர்களை அணியில் இருந்து நீக்க எந்தவொரு பயிற்சியாளர்களும் தயங்கக் கூடாது என்று மலேசிய கால்பந்து பயிற்சி யாளர்கள் சங்கத்தின் தலைவர் பி. சத்தியநாதன் நேற்று கூறினார். ஒரு அணியின் வெற்றிக்கு ஆட்டக்காரர் களிடையே கட்டொழுங்கு மிகவும் முக்கியம். அப்படி கட்டொழுங்கை மீறும் ஆட்டக்காரர்களை அணியில் வைத்துக் கொள்வதால் அது அணிக்கு தான் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
இப்படிப்பட்ட ஆட்டக்காரர்களிடம் பயிற்சியாளர்கள் உரிய பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும். அப்பேச்சுவார்த்தைகளுக்கு பின் ஆட்டக்காரர்களின் செயலில் எந்தவொரு மாற்றமும் இல்லையென்றால் அவர்களை அணியில் இருந்து நீக்குவதுதான் மிகச் சிறந்த நடவடிக்கையாகும். இப்படிப்பட்ட ஆட்டக்காரர்களை நீக்குவதால் அணிக்கு தான் நல்லது என்று சத்தியநாதன் கூறினார்.
Read More: Malaysia Nanban News paper on 17.12.2017
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்