இந்திய அணி தனது 500ஆவது டெஸ்டில் இன்று பங்கேற்க உள்ளது. இதில், கோஹ்லி தலைமை யில் களமி றங்கும் அணி, நியூசிலாந்தை வீழ்த்தும் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் இன்று கான்பூரில் துவங்குகிறது. இது டெஸ்ட் வரலாற்றில் இந்திய அணியின் 500ஆவது போட்டி என்பதால் கூடுதல் சிறப்பு பெறுகிறது. தற்போது இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் பலமாக உள்ளது. சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கேப்டன் கோஹ்லி அசத்தினார். கடைசி 8 டெஸ்டில் 3 சதம் அடித்த லோகேஷ் ராகுல் வருகை கூடுதல் உற்சாகம் தருகிறது. ரோகித்திற்கு பதிலாக புஜாரா இடம் பெறலாம். பந்துவீச்சில் அஷ்வின், அமித் மிஸ்ரா, சமி, புவனேஷ்வர் குமார் இருப்பது பலம். நியூசிலாந்து அணியை கணிப்பது மிகவும் கடினம். கடந்த டுவென்டி-20 உலகக் கிண்ண தொடரில் இந்திய அணிக்கு, அதிர்ச்சி கொடுத்ததை மறக்க முடியாது. வில்லியம்சன் தலைமையில் வந்துள்ள நியூசிலாந்து இம்முறையும் கடும் சவால் தரலாம். இதனால், தனது 50ஆவது டெஸ்டில் களமிறங்கும் இந்திய அணி பெரும் சுதாரிப்புடன் இருப்பது அவசியம். இதுகுறித்து முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியது: இந்திய மண்ணில் ஐ.பி.எல்., தொடரில் விளையாடிய பல்வேறு அனுபவ வீரர்கள் நியூசிலாந்து அணியில் உள்ளனர். இவர்களை குறைவாக எடை போட்டுவிடக் கூடாது. இந்தியாவுக்கு சொந்தமண் பலமாக இருக்கலாம். ஆனால் வெளிநாட்டு அணிகளுக்கு, அந்நியமண் கைகொடுக்காது என்ற காலமெல்லாம் தற்போது மலையேறி விட்டது என்று கபில்தேவ் கூறினார்.
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்