ஏஎப்சி கிண்ண கால்பந்துப் போட்டியின் அரையிறுதி ஆட்டத்திற்கு முன்னேறி ஜேடிதி அணியினர் சாதனைப்படைத்துள்ளனர். லார்க்கின் டான்ஸ்ரீ ஹசான் யூனுஸ் அரங்கில் நடைபெற்ற ஏஎப்சி கிண்ண இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் ஜேடிதி அணியினர் சௌத் சீனா அணியை சந்தித்து விளையாடினர். இவ்விரு அணிகளும் சந்தித்த முதல் காலிறுதி ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. முதல் ஆட்டம் சமநிலையில் முடிந்ததால் இரண்டா வது ஆட்டம் கடும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கியது. முற்பாதி ஆட்டத்தில் இரு அணிகளின் ஆட்டக்காரர்களும் கோல் எதுவும் அடிக்கவில்லை. பிற்பாதி ஆட்டத்தின் 57ஆவது நிமிடத்தில் மார்டின் லுசிரோ ஒரு கோலை அடித்து தமது அணியை முன்னிலைப்படுத்தினார். ஆட்டத்தின் 87ஆவது நிமிடத்தில் பெராய்ரா டிஸ் தமது அணியின் இரண்டாவது கோலை அடித்தார். ஆட்டத்தின் 95ஆவது நிமிடத்தில் எதிரணி ஆட்டக்காரர் ஒரு கோலை அடித்தார். இறுதியில் 3-2 என்ற மொத்த கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஜேடிதி அணியினர் ஏஎப்சி கிண்ண கால்பந்துப் போட்டியின் அரையிறுதி ஆட்டத்திற்கு முன்னேறினர்.
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்