img
img

இங்கிலாந்து லீக் கிண்ணம்
வியாழன் 22 செப்டம்பர் 2016 13:41:11

img

இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியின் நடப்பு சாம்பியனான லெய்செஸ்டர் சிட்டி அணியினர் சொந்த அரங்கில் செல்சியிடம் தோல்வி கண்டது அதன் ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. சிட்டி கிராவ்ன்ட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அர்செனல் அணியினர் 4-0 என்ற கோல் கணக்கில் நோர்ட்டிங்ஹாம் போரஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர். அர்செனல் அணியின் வெற்றி கோல்களை கிரானிட் ஷகா, லூகாஸ் (2), அலெக்ஸ் ஓக்ஸ்லாட் ஆகியோர் அடித்தனர். இப்ரோ அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் டெர்பி கன்ட்ரி அணியை சந்தித்து விளையாடினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் டெர்பி கண்ட்றி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர். லிவர்பூல் அணியின் வெற்றி கோல்களை அதன் முன்னணி ஆட்டக்காரர்களான ரக்னர் கிளாவன், பிலிப்பே கோன்தின்ஹோ, டிவோக் ஓரிஜி ஆகியோர் அடித்தனர். நேற்று நடைபெற்ற இதர ஆட்டங்களில் நோர்விச் சிட்டி, ரீடிங், நியூகாஸ்டல் யுனைடெட், லீட்ஸ் யுனைடெட் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

பின்செல்

விளையாட்டுச் செய்திகள்

img
6ஆவது முறையாக இறுதியாட்டத்தில் கால்பதித்தது அர்ஜெண்டினா!

இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.

மேலும்
img
லியோனல் மெஸ்சி ஓய்வு!

கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியுடன் தாம் ஓய்வு பெறலாம்

மேலும்
img
கட்டார் உலகக் கிண்ணத்தில் மூன்றாவது இடத்தை பிடிக்க குரோஷியா - மொரோக்கோ மோதல்!

கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்

மேலும்
img
ஜெர்மனி கோல் காவலர் மரணம்!

வயது முதிர்வு மற்றும் உடல் நல குறைவால் தில்கோவ்ஸ்கி மரணமடைந்தார்

மேலும்
img
எப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டி: அர்செனல் வெற்றி!

1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img