(ப.சந்திரசேகர்) ஈப்போ,
ஷீகோகாய் கராத்தே விளையாட்டுப் போட்டியின் பொதுப் பிரிவில் ஆர். கங்கா தரன், எஸ். சிவபூரணி ஆகியோர் தங்கப்பதக்கம் வென்று அசத்தினர். ஷீகோகாய் கராத்தே சங்கத்தின் ஏற்பாட்டிலான இப்போட்டி சுங்கை சிப்புட் அரேனா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. கராத்தே விளையாட்டில் அதிகமான இளையோரை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் நடத்தப்பட்ட இப்போட்டியில் 200க்கும் மேற்ப்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டு தங்களின் திறனை வெளிப்படுத்தினர்.
6 வயதில் இருந்து 18 வயதுக்குக் உட்பட்டவர்களுக்கான போட்டியில் பொதுப் பிரிவில் தனி கவனம் செலுத்தப்பட்டது என்று ஷீகோகாய் கராத்தே சங்கத்தின் தலைவர் மாஸ்டர் சி. முருகேசு கூறினார்.ஷீகோகாய் சங்கத்தின் கிளைகளான பாகான் செராய், பாடாங் ரெங்காஸ், ஈப்போ, கம்பார், சுங்கை சிப்புட் ஆகிய பகுதிகளிலிருந்து போட்டியாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.
Read More: Malaysia Nanban News paper on 27.11.2017
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்